எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அவர்தான் – கல்யாணி பிரியதர்ஷன் சொன்னது யார் தெரியுமா?
Kalyani Priyadharshan: மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா படம் திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகின்றது. இந்த நிலையில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.

கல்யாணி பிரியதர்ஷன்
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வர்ந்தவர் பிரியதர்ஷன். இவரது மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Actress Kalyani Priyadarshan). மலையாள சினிமாவில் இவரது தந்தை மிகப்பெரிய நபராக இருந்தாலும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக அறிமுகம் ஆனது தெலுங்கு சினிமாவில் தான். கடந்த 2017-ம் ஆண்டு முதல் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தொடர்ந்து நடித்துள்ளார். அதன்படி தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு தமிழ் சினிமாஅவில் நாயகியாக அறிமுகம் ஆனார். நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் 2020-ம் ஆண்டு முதல் நடிகையான அறிமுகம் ஆன நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அதிக அளவில் மலையாள சினிமாவில் படங்களில் நடித்துள்ளார். அதன்படி இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் அவர் சூப்பர் ஹீரோவாக நடித்த லோகா சாப்டர் 1 சந்திரா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் ரூபாய் 200 கோடிகள் வசூலித்து மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களில் பட்டியளில் இணைந்துள்ளது.
நான் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகை:
இந்த நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்தப் பேட்டியில் நான் சிவகார்த்திகேயன் கூட சேர்ந்து நடிப்பதற்கு முன்பே அவருடைய மிகப்பெரிய ரசிகை நான். இதை நான் அவர்கிட்ட சொன்னபோது அவர் அத நம்பவே இல்லை.
அப்பறம் அவர் கூட வேலை செஞ்சேன்னு சொல்றது விட நிறைய கத்துகிட்டேன். அவர் செட்ல இருக்கும் போது சிரிச்சுட்டே இருப்போம். அவரோட காமெடி சென்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… மை காட்.. எக்ஸலன்ட்… மதராஸியை பாராட்டிய சூப்பர் ஸ்டார் – மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்
இணையத்தில் கவனம் பெறும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் பேச்சு:
I was always an #Sivakarthikeyan (SK) fan… I go to FDFS since Kedi Billa Killadi Ranga… I used to travel 2 to 3 hours to watch his movies in theater when I was studying in US… @kalyanipriyan She’s Biggest Fan Girl of SK naa♥️🔥📈 https://t.co/XTreTigtCJ pic.twitter.com/tyk5USQY2j
— Ragnar 🐺 (@Oold_wolf) September 10, 2025
Also Read… ஒரு ஆர்டினரி மேனவிட எக்ஸ்ட்ராடினரி என்ன இருக்கு – அன் ஆர்டினரி மேன் படத்தின் புரோமோ வீடியோ இதோ