ஜீனி படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
Actress Kalyani Priyadarshan: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பலப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது ரவி மோகனுடன் இணைந்து ஜீனி படத்தில் நடித்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Actress Kalyani Priyadarshan). இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தற்போது ரூபாய் 300 கோடிகள் வரை வசூலித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் பவர் உடைய பெண்காக நடித்து இருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் தொடர்ந்து 5 பாகங்களாக உருவாக உள்ளது குறித்து படக்குழு முன்னதாகவே அறிவித்து இருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகத்திற்கான பணிகள் தொடங்கியது குறித்து படக்குழு அறிவித்து இருந்தது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான இந்த லோகா படம் மலையாள சினிமாவில் அதிமக் வசூலித்த படங்களின் பட்டியளில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி மாபெரும் வரவேற்பைப் பெற்ற லோகா படத்திற்கு பிறகு நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜீனி. இந்தப் படம் குறித்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜீனி குறித்து கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு:
இந்த நிலையில் ஜீனி படம் குறித்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, ஒரு நடிகையா, நான் இதுவரை செய்யாத விஷயங்களைச் செய்ய எப்போதும் என்னைத் ஊக்கப்படுத்திக்கொள்வேன். இந்தப் பாடல் அந்த தருணங்களில் ஒன்று. நமது இயக்குனர் புவனேஷ் இதைப் பற்றி என்னிடம் சொன்னபோது, இவ்வளவு அழகாக ஒரு இசைப் பகுதியை ஜீனியின் கதையின் உண்மையான மற்றும் முக்கியமான பகுதியாக மாற்றியிருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.
நீங்கள் அனைவரும் அதைப் படத்தில் பார்ப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் – அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை! மிகவும் கடினமாக உழைத்து, புதிதாக ஒன்றை முயற்சித்தேன், உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் அந்தப் பதிவில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்து இருந்தார்.
Also Read… மாஸ்க் படத்திலிருந்து வெளியானது கண்ணு முழி பாடல் வீடியோ!
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
As an actor, I always try to push and challenge myself to do things I’ve never done before. This song was one of those moments ❤️
When our director Bhuvanesh told me about it, I was amazed at how nicely he made such a commercial musical piece into a real and important part of… pic.twitter.com/fFjxigtyVb— Kalyani Priyadarshan (@kalyanipriyan) October 7, 2025