கேங்ஸ்டர் க்ரைம் த்ரில்லர் படம் பிடிக்குமா உங்களுக்கு? சோனி லிவ் ஓடிடியில் இந்த பணி படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Pani Movie : மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் இயக்கி நாயகனாக நடித்த பணி படம் குறித்து தற்போது பார்க்கலாம்.

கேங்ஸ்டர் க்ரைம் த்ரில்லர் படம் பிடிக்குமா உங்களுக்கு? சோனி லிவ் ஓடிடியில் இந்த பணி படத்தை மிஸ் செய்யாதீர்கள்

பணி

Published: 

03 Dec 2025 22:46 PM

 IST

மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் மலையாள சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வரும் நிலையில் தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி இவர் இறுதியாக தமிழ் சினிமாவில் நடித்தப் படம் தக் லைஃப். இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவ்வபோது நடிக்கும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகராக சினிமாவில் வலம் வந்த ஜோஜூ ஜார் கடந்த 2024-ம் ஆண்டு மலையாள சினிமாவில் பணி என்ற படத்தை எழுதி இயக்கி உள்ளார். அதன்படி கடந்த 24-ம் தேதி அக்டோபர் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது பணி படம்.

கேங்ஸ்டர் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை ஜோஜூ ஜார்ஜ் தான் எழுதி இயக்கி இருந்தார். தொடர்ந்து ஜோஜூ ஜார்ஜ் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் அபிநயா, சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி. சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அலெக்சாண்டர் பிரசாந்த், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதன், பிட்டோ டேவிஸ், அபய ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், ஜெயசங்கர் கரிமுட்டம், லங்கா லக்ஷ்மி, மெர்லெட் ஆன் தாமஸ், அனூப் கிருஷ்ணன், ஜெயராஜ் வாரியர், பாபு நம்பூதிரி, ரினோஷ் ஜார்ஜ், ரமேஷ் கிரிஜா, அஷ்ரப் மல்லிசேரி ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

பணி படத்தின் கதை என்ன?

கேரள மாநிலத்தில் திரிசூரில் ஒரு பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் ஜோஜூ ஜார்ஜின் குடும்பம். இவர்களின் குடும்பம் பண பலத்திலும் அதிகார பலத்திலும் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் கூலிக்காக கொலை செய்யும் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் இடையே ஒரு மோதல் ஏற்படுகிறது. கூலிக்காக கொலை செய்யும் இளைஞர்களில் ஒருவர் பெண்களை தவறான என்னத்தில் பார்க்கும் நபராக இருக்கிறார்.

Also Read… கம்ருதினால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை… வைரலாகும் வீடியோ!

இவர் ஒரு நாள் ஜோஜுவின் மனைவி அபிநயாவிடம் தவறாக நடந்துகொள்ள பார்ப்பார். அப்போது அபிநயா அவரை அடித்துவிடுகிறார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஜோஜூவும் அவர்களை கடுமையாக தாக்கிவிடுகிறார். இதனால் கோபமடைந்த அந்த இளையஞர்கள் ஜோஜூ இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் புகுந்து அபிநயாவை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்களை ஜோஜூ ஜார் எப்படி பழி வாங்கினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சோனிலிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… மூன்வாக் படத்திற்காக ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த விசயம் – வைரலாகும் வீடியோ

இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது.. எலான் மஸ்க் ஓபன் டாக்..
ஹார்திக் பாண்டியாவுக்கு நிச்சயதார்த்தமா? வைரலாகும் வீடியோ..
ரேபிடோ ஓட்டுநரின் கணக்கில் ரூ.331. 36 கோடி.. அமலாக்கத்துறை விசாரணை
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பீட்சா மற்றும் பானி பூரி