TTT Movie: கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா.. ஜீவா TTT பட டீசர் இதோ!
Thalaivar Thambi Thalaimaiyil Movie Teaser: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஜீவா. இவர் தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில், இவரின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம்தான் தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படம். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் டீசர்
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜீவா (Jiiva). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் இவர் தெலுங்கிலும் படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். அந்த வகையில் நடிகர் ஜீவாவின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அகதியா (Aghathiyaa). இந்த படத்தை பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான பா. விஜய் (Pa. Vijay) இயக்கியிருந்தார். இந்த படமானது ஜீவாவிற்கு அந்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தை அடுத்ததாக தொடர்ந்து, புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் (Nithish Sahadev) இயக்கத்தில் ஜீவா நடித்துவந்த திரைப்படம்தான் தலைவர் தம்பி தலைமையில் (Thalaivar Thambi Thalaimaiyil) என்ற திரைப்படம்.
இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்துவருகிறார். இந்த படமானது அரசியல், நகைச்சுவை மற்றும் மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இன்று 2025 அக்டோபர் 17ம் தேதியில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த தலைவன் தம்பி தலைமையில் பட டீசரை இணையத்தில் நடிகர் கார்த்தி (Karthi) வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வடசென்னை பாணி.. ரசிகர்களை கவர்ந்த சிலம்பரசனின் அரசன் ப்ரோமோ வீடியோ!
நடிகர் கார்த்தி வெளியிட்ட தலைவர் தம்பி தலைமையில் பட டீசர் பதிவு :
Here is the fun maxx teaser of #TTT !
Enjoy the chaos 😉
🔗 https://t.co/oQlpwgYFfc#ThalaivarThambiThalaimaiyil@JiivaOfficial@Nathanprathana @NithishSahadev@kannanravi50388
— Karthi (@Karthi_Offl) October 17, 2025
இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா முன்னணி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரதனா நந்தன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே லவ் டுடே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் நடிகர் தம்பி ராமையா, இளவரசு, ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன் ராஜேஸ்வர் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்துவருகிறார். தற்போது இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்தின் கதை என்ன :
இந்த தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படமானது அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா அரசியல்வாதியாக நடித்துள்ளார். அவர் ஓட்டிற்காக ஒரு கல்யாண வீடிற்கு செல்கிறார், அந்த வீட்டில் கல்யாணம் தடைபட்டு நடக்கும் நகைச்சுவை விஷயங்களை வைத்து முழுமையாக இந்த திரைப்படமானது உருவாகியிருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: சாதித்தாரா துருவ்?.. பைசன் படத்தின் விமர்சனம் இதோ!
இந்த படமானது தயாராகிவரும் நிலையில் இந்த 2025ம் ஆனது இறுதிக்குள் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.