Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் படத்தின் வீடியோவை வெளியிட்ட படக்குழு

Jason Sanjay and Pradeep Kishan: தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் சந்தீப் கிஷனின் 31-வது படத்தை நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் ஜேசன் சஞ்சை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். படத்தின் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் படத்தின் வீடியோவை வெளியிட்ட படக்குழு
ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 May 2025 14:11 PM IST

தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக என்ட்ரி கொடுத்துள்ளார் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். எஸ்.ஏ.சந்திரசேகர் சவுண்ட் இன்ஜினியராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் பிறகு சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இயக்குநராக 1981-ம் ஆண்டு இயக்குநராக பணியை தொடங்கினார். பிறகு பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார். தமிழி சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களாக உள்ள பலர் சந்திரசேகரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று கொண்டாடப்படும் இயக்குநர் சங்கர் சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழில் சினிமாவில் இவரது இயக்கத்தில் 1984-ம் ஆண்டு முதல் 1988-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக சந்திரசேகரின் படங்களில் நடித்தார் நடிகர் விஜய்.

பிறகு இரண்டாவது தலைமுறையாக நடிகர் விஜய் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். 1992-ம் ஆண்டு தனது தந்தை சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் விஜய். முதல் படத்திற்கு வாய்பை தனது தந்தை வாய்ப்பு கொடுத்தாலும் தனது சொந்த முயற்சியால் தற்போது கோலிவுட்டின் உச்ச நடிகராக இருக்கிறார் விஜய்.

இப்படி இரண்டு தலைமுறைகள் சினிமாவில் சதித்ததை தொடர்ந்து தற்போது மூன்றாவது தலைமுறையாக நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளார். இவரது இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். ஜேசன் சஞ்சயின் முதல் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனகான லைகா தயாரித்துள்ளது.

இந்தப் படம் குறித்த அறிவிப்பை முன்னதாக படக்குழு வெளியிட்டது. அப்போது லைகா நிறுவனம் அஜித்தின் விடாமுயற்சி பணிகளில் இருந்தது. இதனால் ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் படம் தொடங்க தாமதம் ஆனது. பிறகு விடாமுயற்சி படம் முடிந்த பிறகு ஜேசனின் படம் விறுவிறுப்பாக தொடங்கியது.

லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் தற்போது நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு எக்ஸ்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் ஜேசன் சஞ்சய் ரோலிங் கேமரா ஆக்‌ஷன் என கூறுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.