Jana Nayagan: ஜன நாயகனின் க்ளைமேக்ஸ் காட்சி.. ஹெச்.வினோத் செய்திருக்கும் தரமான சம்பவம்!
Jana Nayagan Climax Update : தளபதி விஜய்யின் முன்னணி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் ஜன நாயகன். இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியிருக்கும் நிலையில், மிக பிரம்மாண்ட கதைக்கலத்தில் தயாராகியிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம்
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) 69வது படமாக தயாராகிவருவது ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகாவுள்ளதாம். இந்த படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே பீஸ்ட் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜன நாயகன் படமானது வரும் 2026 ஜனவரி 09 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், இப்படத்தின் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஜன நாயகன் பட க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய், மனித உருவம் கொண்ட ரோபோட்டுடன் சண்டைபோடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அது குறித்தான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே… வெளியானது குஷி படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர்
ஜன நாயகன் பட க்ளைமேக்ஸ் குறித்து வைரலாகும் தகவல்
ஜன நாயகன் படமானது தளபதி விஜயின் இறுதி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இணையத்தில் வைரலாகும் தகவலின்படி, இந்த ஜன நாயகன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் தளபதி விஜய் மனித உருவங்கள் கொண்ட ரோபோட்டுடன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.
இதையும் படிங்க : அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ் இருந்தது… ஆனால் அவர் என்ன தங்கச்சினு சொல்லிட்டாரு – பிரபல நடிகை ஓபன் டாக்
மேலும் ஏற்கனவே நரேன், ஜன நாயகன் படத்தில் தான் சைன்டிஸ்ட் வேடத்தில் நடித்திருப்பதாக கூறியிருந்த நிலையில், ஒருவேளை இந்த படத்தில் நரேன் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்திருக்கலாம் என கூறப்படுகிது. இந்த தகவலானது தற்போது இணையதளங்களில் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. இயக்குனர் ஹெச். வினோத் ஏதோ பெரிய விஷயத்தை செய்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
மேலும் இந்த ஜன நாயகன் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் வெளியிட்ட ஜன நாயகன் பட போஸ்டர் பதிவு
#JanaNayagan pic.twitter.com/Sv5q81Q3fl
— Vijay (@actorvijay) June 22, 2025
ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா
தளபதி விஜய்யின் கடைசி படமாக ஜன நாயகன் உருவாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாம். இந்த நிகழ்ச்சியானது வரும் 2025 டிசம்பர் 26ம் தேதியில் மலேஷியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை