Jana Nayagan: பூஜா ஹெக்டேவின் பர்த்டே.. கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ஜன நாயகன் படக்குழு!
Pooja Hegde Jana Nayagan Character Introduction : தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே. நடித்துள்ளார். இந்த நிலையில், இன்று பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜன நாயகன் படக்குழு கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது.

பூஜா ஹெக்டே
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) முன்னணி நடிப்பில் 69-வது திரைப்படமாக உருவாகிவருவதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தளபதி 69 (Thalapathy69) என அறிவிக்கப்பட்டநிலையில், கடந்த 2025 மே மாதத்துடன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இதில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்துள்ளார். இந்த ஜன நாயகன் படத்தின் மூலம் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் கூட்டணி இரண்டாவது முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜன நாயகன் படத்தை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனமானது தயாரித்துவருகிறது. இந்த ஜன நாயகன் படமானது தளபதி விஜய்யின் இறுதி படம் என கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், இன்று 2025 அக்டோபர் 13ம் தேதியில் பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜன நாயகன் படக்குழு கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த ஜன நாயகன் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, “கயல்” (Kayal) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: வீங்கிய கால்கள்.. சோர்வடைந்த உடல் – ரிஷப் ஷெட்டி பகிர்ந்த ‘காந்தாரா சாப்டர் 1’ பட கிளைமேக்ஸ் அனுபவம்
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட பூஜா ஹெக்டேவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் பதிவு :
Team #JanaNayagan wishes Kayal aka @hegdepooja, A very happy birthday ♥#HappyBirthdayPoojaHegde#Thalapathy @actorvijay sir #HVinoth @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/gCNXuOPXc4
— KVN Productions (@KvnProductions) October 13, 2025
நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் கயல் என்ற வேடத்தில் நடித்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஜன நாயன் படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 2 மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் மற்றும் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகை பூஜா ஹெக்டே பிறந்த நாள் – சிறப்பு போஸ்டரை வெளியிட்ட DQ41 படக்குழு
மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வரும் 2025 நவம்பர் மாதத்தின் முதல் தொடங்கவுள்ளதாம். மேலும் ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகவிருந்த நிலையில், கரூர் விவகாரம் தொடர்பாக நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம்.
பூஜா ஹெக்டேவின் புதிய திரைப்படங்கள் :
ஜன நாயகன் படத்தை தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டே 2 வருடங்களுக்கு பின் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நுழைந்துள்ளார். நடிகர் துல்கர் சல்மானின் DQ41 படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியிலும் புதிய படத்தில் நடித்துள்ளார். மேலும் ஜன நாயகன் படத்தை அடுத்ததாக தமிழில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.