அடுத்ததாக விஜய் சேதுபதியின் ஹிட் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

Actor Sivakarthikeyan: தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக மாறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக எந்த இயக்குநருடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அடுத்ததாக விஜய் சேதுபதியின் ஹிட் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன்

Published: 

31 Jul 2025 10:38 AM

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானவராக இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நாயகனாக நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். இப்படி இருந்த நிலையில் இனி தொடர்ந்து காமெடி மட்டுமே செட்டாகாது என்பதை உணர்ந்த சிவகார்த்திகேயன் ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்து வித எமோஷன்களும் அடங்கிய படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துவந்ததால் அவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் பட்டியளில் இடம் பிடித்துவிட்டார்.

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரிப்பது, படங்களுக்கு பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என மல்டி டேலண்டட் நபராக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அப்டேட் சினிமா வட்டாரங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமாவில் நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் கதைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இந்தப் படத்திற்கு இசையமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போதைக்கு வெளியாகாது என்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களில் வெளியீட்டிற்கு பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… பிளாக் அண்ட் ஒயிட்டில் ரசிகர்களைக் கவரும் சமந்தா.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அதன்படி அமரன் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நடிகர் சிவகர்த்திகேயன் தற்போது மதராஸி படத்தை நடித்து முடித்துள்ளார். படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் விறுவிறுப்பாக நட்டித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மதராஸி படத்தின் சிங்கிள் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மோகன்லாலின் லூசிஃபர் 3 படம் பற்றி தவறான கருத்து? – நடிகர் பிருத்விராஜ் தரப்பு விளக்கம்!