மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி… இயக்குநர் வி.இசட். துரை இயக்கத்தில் நடிக்கும் சுந்தர் சி

Sundar C stars for the third time under the direction of V.Z. Durai : தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வி.இசட். துரை. இவர் மூன்றாவது முறையாக சுந்தர் சி உடன் கூட்டணி வைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி... இயக்குநர் வி.இசட். துரை இயக்கத்தில் நடிக்கும் சுந்தர் சி

சுந்தர் சி

Published: 

19 Mar 2026 16:51 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் முகவரி. இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar) நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை எழுதி இயக்கியதன் மூலம் ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்தவர்தான் இயக்குநர் வி.இசட்.துரை (Director VZ Durai). அதன்படி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் வி.இசட் துரை இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி, 6, ஏமாளி, இருட்டு மற்றும் தலைநகரம் 2 ஆகியப் படங்கள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்தது. அதன்படி வி.இசட்.துரை இயக்கத்தில் இறுதியாக வெளியான இரண்டு படங்களும் நடிகர் சுந்தர் சி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில் நடிகர் சுந்தர் சி நடித்த இருட்டு படம் ஹாரர் த்ரில்லர் பாணியில் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. அதனைத் தொடர்ந்து மிகவும் ஜாலியான பாணியில் வெளியானது தலைநகரம் 2. இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல வித்யாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணியில் மூன்றாவதாக படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… ஆத்தாடி மனசுதான் ரெக்க கட்டி பறக்குது… 14 ஆண்டுகளைக் கடந்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற கழுகு படம்!

3-வது முறையாக வி.இசட். துரை இயக்கத்தில் நடிக்கும் சுந்தர் சி:

அதன்படி இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி கேங்கர்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகராக நடிக்க உள்ளார். இந்தப் படமும் இருட்டு படத்தைப் போல ஹாரர் பாணியில் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இயக்குநர் சுந்தர் சி படங்களை இயக்குவதில் தற்போது பிசியாக உள்ள நிலையில் அந்தப் படங்களின் பணிகளை முடித்த பிறகு இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அப்டேட்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… அண்ணா மாதிரி பார்த்தேன் அந்த இயக்குநர் இப்படி பண்ணுவார்னு நினைக்கல – மாஸ்டர் மகேந்திரன்

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி