விஜய் சேதுபதி பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா… இணையத்தை கலக்கும் தகவல்

Suriyas next movie update viral on social media: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வரும் நிலையில் புதிதாக எந்த இயக்குநரின் படத்தில் அவர் இணைய உள்ளார் என்பது குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது.

விஜய் சேதுபதி பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா... இணையத்தை கலக்கும் தகவல்

சூர்யா

Published: 

10 Mar 2026 15:51 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது அடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி வருகின்றது. அதில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு படம், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 47 ஆகியப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் முதலாவதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படம் திரையரங்குகலில் வெளியாக உள்ளது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து வருகின்ற ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. மேலும் இந்தப் படங்களைத் தொடர்ந்து சூர்யா 47 படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜய் சேதுபதியை தொடர்ந்து சூர்யாவை இயக்க தயாராகும் பிரபல இயக்குநர்:

இந்த நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக பிரபல இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை முடித்த பிறகு இயக்குநர் பூரி ஜெகன்நாத் நடிகர் சூர்யாவின் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… D56 Movie: தனுஷின் டி56 படத்தில் நடிக்கும் உறியடி பட நடிகர்? இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து போட்ட பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்த சிறை படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..