இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எங்கு எப்போது தெரியுமா? வைரலாகும் அப்டேட்
Idli Kadai Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ரசிகர்களிடையே அதிகம் எதிர்பாக்கப்படும் படம் இட்லி கடை. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியீடு எப்போது என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இட்லி கடை
பான் இந்திய அளவில் மட்டும் இல்லாமல் ஹாலிவுட் அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ், இவர் பான் இந்திய அளவில் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி ஹாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படி ஹாலிவுட் அளவில் ரசிகர்களால் நன்கு அறியப்படும் நடிகராக இருக்கும் தனுஷிற்கு கோலிவுட் சினிமாவில் ரசிகர்களின் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். தனது சொந்த உழைபால் இந்த இடத்திற்கு உயர்ந்து இருக்கும் தனுஷ் அவரின் ரசிகர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறார் என்பதே குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. மிகவும் வித்யாசமான கதாப்பாத்திரமான பிச்சைக்காரர் வேடத்தில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் இட்லி கடை. இது நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகும் 52-வது படமாகும். இந்தப் படத்தை அவரே இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இட்லி கடை படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ள நிலையில் அவரது தங்கையாக நடிகை ஷலினி பாண்டே நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், சமுத்திரகனி மற்றும் சத்யராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
20-ம் தேதி கோயம்புத்தூரில் வெளியாகும் இட்லி கடை படத்தின் ட்ரெய்லர்:
இந்த நிலையில் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் வொண்டர் பார் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. அதில் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் பேசியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 20-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள புரோசோன் மாலில் வெளியிட உள்ளதாக படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… நடிகர் ஜெய் நடிக்காமல் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா? அவரே சொன்ன விசயம்
இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kovai, Get ready for a feast 💥#IdliKadai – Trailer launch event on 20th September at Prozone Mall in Coimbatore
Massive release worldwide on the 1st of October ❤️@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms… pic.twitter.com/JdfFf8T9x1
— Wunderbar Films (@wunderbarfilms) September 17, 2025