உமாபதி ராமையா இயக்கத்தில் பொலிட்டிகல் சட்டையர் பாணியில் வெளியான TN 2026 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

TN 2026 Movie X Review Here: நடிகரும் இயக்குநருமான உமாபதி ராமையா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான படம் TN 2026. இந்தப் படத்தினை திரையரங்குகளில் பார்த்தவர்கள் தங்களது கருத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது என்ன என்று பார்க்கலாம்.

உமாபதி ராமையா இயக்கத்தில் பொலிட்டிகல் சட்டையர் பாணியில் வெளியான TN 2026 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

TN 2026

Published: 

10 Apr 2026 16:11 PM

 IST

தமிழ் சினிமாவில் இன்று 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு பொலிட்டிகள் சட்டையர் படமாக வெளியாகி உள்ளது TN 2026. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான போதே மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன்படி இந்த TN 2026 படத்தில் தமிழக அரசியலில் ஏற்படும் நிகழ்வுகளை ரீ கிரியேட் செய்து இருந்தனர். இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான உமாபதி ராமையா எழுதி இயக்கி இருந்தார். படத்தின் டீசரில் முழுக்க முழுக்க விஜயின் அரசியல் வருகையை காட்டி இருந்த நிலையில் அதனை கிண்டலடிக்கும் விதமாக எடுத்து இருந்தனரா அல்லது பாசிட்டிவாக எடுத்து இருந்தனரா என்று படத்தைப் பார்த்த பிறகே தெரியும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். இந்தப் படத்தில் நடிகர் நட்டி நடராஜ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சங்களை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

TN 2026 படத்தின் விமர்சனம் இதோ:

உமாபதி ராமையா இயக்கத்தில் நடிகர் நட்டி நடராஜ் மற்றும் தம்பி ராமைய நடிப்பில் இந்தப் படம் மிகவும் அருமையாக உள்ளது, இந்தப் படம் தளபதி விஜய்க்கு ஒரு அரசியல் அடித்தளமாக அமையும் உணர்வைத் தருகிறது. இதில் தளபதி தொடர்பான பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன; மேலும், பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன.

TN 2026 படத்தின் விமர்சனம் இதோ:

இது நிச்சயமாக நடிகர் தளபதி விஜயின் ரசிகர்களுக்கு கூஸ் பம்ஸாக இருக்கும். இது தளபதி வழக்கமாகச் செய்யும் சாகசம் மட்டுமல்ல; இது வேறொரு உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு பிரம்மாண்டமான ஏற்றம் பாருங்கள், என்னவொரு திருப்பத்தை வைத்திருக்கிறார். ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்து, ஆரவாரத்துடன் வெறித்தனமாக இருக்கிறார்கள்.

Also Read… ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்? வைரலாகும் தகவல்

TN 2026 படத்தின் விமர்சனம் இதோ:

இது முழுக்க முழுக்க கூஸ் பம்ஸாக இருந்தது. முழுக்க முழுக்க கொண்டாட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் இந்தப் படம் ஒரு ப்ளாஸ்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிபட்ட படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு ஒரு தைரியம் வேண்டும்.

Also Read… விஜய் டிவியில் இந்த வார டிஆர்பி.. முதல் இடத்தை பிடித்திருக்கும் சீரியல் எது தெரியுமா?

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?