3 நாட்களில் தாய் கிழவி படம் வசூலித்தது எத்தனை கோடிகள்? அப்டேட் இதோ
Thaai Kizhavi Box Office Collection in 3 Days: தமிழ் சினிமாவில் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தாய் கிழவி. இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 3 நாட்களில் எவ்வளவு என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

தாய் கிழவி
தமிழ் சினிமாவில் கடந்த வாரம் 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வரிசையாகப் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியனது. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளியான படங்களில் ஒன்று தான் தாய் கிழவி. இந்தப் படத்தில் தாய் கிழவியான பவுனுதாயி கதாப்பாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்து இருந்தார். இவருக்கு மிகவும் வயது முதிர்ந்த பெண்ணின் வேடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த தோற்றத்தில் பார்த்தால் அது ராதிகா என்ற அடையாளம் தெரியாத அளவிற்கு அந்த மேக் அப் மிகவும் கச்சிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமாரின் நடிப்பைப் பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்த நிலையில் படத்தில் ராதிகா சரத்குமார் உடன் இணைந்து நடிகர்கள் ரைச்சல் ரபேக்கா,
ஆத்தாடி குமரன், சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், இளவரசு, முத்துக்குமார், ஜார்ஜ் மரியன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 நாட்களில் தாய் கிழவி படம் வசூலித்தது எத்தனை கோடிகள்?
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 3 நாட்கள் முடிவடைந்த நிலையில் படத்தின் வசூல் உலக அளவில் எவ்வளவு என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 3 நாட்களின் முடிவில் மொத்தம் ரூபாய் 22 கோடிகள் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… IND Vs WI போட்டியின் நேரடி ஒளிபரப்பில் கருப்பு பட அப்டேட் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
22+ Crores Worldwide GBOC 🥳#Pavunuthaayi-in MORATTU VASOOL 💥💥💥💥💥#ThaaiKizhavi Ruling Box-Office! #BlockbusterThaaiKizhavi@Siva_Kartikeyan @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl @PassionStudios_ @realradikaa @Dir_SivakumarM @archanakalpathi @aishkalpathi… pic.twitter.com/tDZrl5zfx8
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) March 2, 2026
Also Read… ஃபிலிம் கேமராவில் படமாக்கப்பட உள்ளது KHxRK படம்? வைரலாகும் தகவல்