தியேட்டரில் கொண்டாடுன அளவுக்கு ஓடிடியில் கொண்டாடுவாங்களா ரசிகர்கள்? ஓடிடியில் வெளியான கென் கருணாஸின் யூத் படத்தின் விமர்சனம் இதோ

Actor Ken Karunas's Youth Movie OTT Review | நடிகர் கென் கருணாஸ் எழுதி இயக்கி நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் யூத். இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

தியேட்டரில் கொண்டாடுன அளவுக்கு ஓடிடியில் கொண்டாடுவாங்களா ரசிகர்கள்? ஓடிடியில் வெளியான கென் கருணாஸின் யூத் படத்தின் விமர்சனம் இதோ

யூத் படம்

Published: 

16 Apr 2026 20:06 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ரகலைபுரம் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் கென் கருணாஸ். அதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பிறகு 2017-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து வெளியான அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும் பாராட்டையும் பெற்றார் கென். அதனைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை பாகம் இரண்டு படங்களில் நடித்த நடிகர் கென் தற்போது அவரே படதை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்து உள்ளார். அதன்படி கென் கருணாஸ் எழுதி, இயக்கி நாயகனாக நடித்து உள்ள படம் யூத். இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனங்களான பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ், ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோஸ், மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம், சுலோச்சனா குமார், காளி ராஜ்குமார், பிரபா பிரேம்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் வெளியான கென் கருணாஸின் யூத் படம் எப்படி இருக்கு?

இந்தப் படத்தில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு – தேவதர்ஷினியின் மகன் தான் கென் கருணாஸ். சுராஜ் வெஞ்சரமூடு – தேவதர்ஷினி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள், தேவதர்ஷினி பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் சுராஜ் சாதார குடும்பத்தை சேர்ந்த படிப்பறிவு இல்லாதவராக இருக்கிறார். அதனாலேயே சொந்த பந்தங்களால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

Also Read… பிரதீப் ரங்கநாதனின் 4-வது 100 கோடி படமாக இதை மாற்ற முயற்சிக்கிறோம் – விக்னேஷ் சிவன்

சொந்த தொழில் செய்து வந்தாலும் படிப்பும் பணமும் இல்லாத காரணத்தால் அவமானப்படுத்தப்படுவதால் தங்களது மகன் கென் படித்து பெரிய கலெக்டராக வேண்டும் என்று அம்மா தேவதர்ஷினி நினைக்கிறார். ஆனால் 10-ம் வகுப்பிலேயே 35, 36 என்று பார்டரில் மார்க் எடுத்துதான் கென் பாசாகி இருப்பார். இதில் அவருக்கு காதல் செயவதுதான் முதல் குறிக்கோளாக உள்ளது.

படிப்பின் மீது சுத்தமாக ஆர்வமே இல்லாத கென் அம்மா அப்பாவின் கனவை நினைவாக்க்கினாரா? அல்லது அவரது காதல் கனவில் வெற்றிப் பெற்றாரா? 12-வது பாஸானாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் வீடியோ

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி