தீபாவளியை முன்னிட்டு தொலைக்காட்சியில் என்னென்ன புது வரவு – லிஸ்ட் இதோ

Diwali Sepcial Movies: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தொடர்ந்து புதுப் படங்கள் வெளியாவது போல தொலைக்காட்சிகளிலும் தொடர்ண்டு புதுப் படங்கள் வெளியாவது வழக்கமாக உள்ளது. அதன்படி தமிழ் சின்னத்திரையில் முன்னிலை வகிக்கும் தொலைக்காட்சிகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தீபாவளியை முன்னிட்டு தொலைக்காட்சியில் என்னென்ன புது வரவு - லிஸ்ட் இதோ

படங்கள்

Published: 

19 Oct 2025 18:14 PM

 IST

கூலி: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. ஆக்‌ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் படத்தில் நடிகர்கள் நாகர்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ், கண்ணா ரவி, ரச்சிதா ராம், காளி வெங்கட், லொள்ளு சபா மாறன், சார்லி, திலீபன், ரவி ராகவேந்திரா, அய்யப்பன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தார். இந்த நிலையில் இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 20-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

குபேரா: நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் குபேரா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் படம் வருகின்ற 20-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… கர்ணன் படத்துல அந்த ஒரு ஷாட்தான் நாம் ரொம்ப எஞ்சாய் பண்ணேன் – இயக்குநர் மாரி செல்வராஜ்!

தலைவன் தலைவி: நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்து இருந்தார். ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பாண்டியராஜ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 20-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு விஜய் டிவியில் மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏஸ்: நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஏஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஆறுமுகக் குமார் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ருக்மினி வசந்த் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது வருகின்ற 20-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… வாகை சூட வா படத்தில் கலர் தியரி இப்படி இருக்கும் – இயக்குநர் சர்குணம் ஓபன் டாக்

மாமன்: நடிகர் சூரி நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது மாமன் படம். இந்தப் படத்திற்கு நடிகர் சூரி திரைக்கதை எழுதி இருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராகவும் சூரி அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்த நிலையில் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து இருந்தார். இந்த நிலையில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 20-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories
நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்
Sarathkumar: ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!
அருண் விஜய்யின் ரெட்ட தல படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் ஓபன் டாக்!
வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!
மாரி செல்வராஜ் உலகத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை – பைசன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி
Dhruv Vikram: அதற்காக எங்க அப்பா ரொம்ப அடிச்சாரு.. காரணம் எங்க அக்காதான்- துருவ் விக்ரம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!