தளபதி விஜயை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் எச்.வினோத்? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அப்டேட்

Director H Vinoth and Actor Suriya Project confirmed | தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் அடுத்தடுத்து 3 படங்களில் நடித்து வந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் எச். வினோத் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தளபதி விஜயை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் எச்.வினோத்? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அப்டேட்

சூர்யா

Published: 

13 Apr 2026 18:20 PM

 IST

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்களில் வெளியாக கத்திருக்கின்றது. அந்த வகையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 45-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். கருப்பு என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் தான் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மீதும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படமும் இந்த 2026-ம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜயை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் எச்.வினோத்?

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது 48-வது படத்திற்காக இயக்குநர் எச்.வினோத் உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஜூலை மாதம் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் முன்னதாக இயக்குநர் எச்.வினோத் நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் தொடர்பான பிரச்சனைகள் முடிவடையாமல் சென்றுகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜன நாயகன் படம் 100 சதவீதம் தியேட்டரில் வெளியாகும்.. ஆனால் – திருப்பூர் சுப்ரமணியன்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு:

Also Read… Singer Asha Bhosle : பெரும் இழப்பு.. பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?