குட் பேட் அக்லி படத்தின் காப்பி ரைட்ஸ் பிரச்னை – ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்

GV Prakash Kumar: கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து புதுப் படங்களில் பழையப் படங்களின் பாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாடல்களை பயனபடுத்துவதால் புதுப் படங்களுக்கு காப்பி ரைட்ஸ் பிரச்சனை ஏற்படுகின்றது. இதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தின் காப்பி ரைட்ஸ் பிரச்னை - ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்

ஜிவி பிரகாஷ்

Published: 

20 Sep 2025 11:02 AM

 IST

கோலிவுட் சினிமாவில் தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் முன்னதாக வெளியான படங்களில் சூப்பர் ஹிட் அடித்தப் பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்த பாடல்களை அனுமதி இன்றி பயனப்டுத்தும் படக்குழுவினர் மீது தொடர்ந்து அவர் காப்பி ரைட்ஸ் வழக்கை பதிவிட்டு வருகிறார். ஆனால் இளையராஜா தவிற மற்ற இசையமைப்பாளர்கள் அவர்களின் பாடல்களை தற்போது வரும் படங்களில் பயன்படுத்தப்பட்டால் அதற்கு அவர்கள் வழக்கு எதுவும் பதிவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் பாடல்கள் தற்போது உள்ள தலைமுறையினரிடம் மீண்டும் வரவேற்பைப் பெறுவது தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இதுகுறித்து சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா பேசுகையில் நமது பாடல்கள் தற்போது உள்ள இளம் தலைமுறையினரிடம் பிரபலம் ஆவது மகிழ்ச்சி என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொடர்ந்து இளையராஜா காப்பி ரைட்ஸ் வழக்கை பதிவிடுவது குறித்து சமூக வலைதளத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டாலும் இளையராஜா உடன் இருப்பவர்கள் தொடர்ந்து அவர் காசுக்காக காப்பி ரைட்ஸ் வழக்கை பதிவிடுவதில்லை. அவரிடம் ஒரு மரியாதைக்காக  அனுமதி கேட்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

முழுக்க முழுக்க இயக்குநரின் ஆசைதான் அது:

இந்த நிலையில் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல் பயன்படுத்தியதற்கக படத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து படம் நெட்ஃபிலிக்ஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் பழையப் பாடல்களைப் பயன்படுத்தியது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறியதாவது, படத்தில் பழையப் பாடல்களைப் பயன்படுத்துவது என்னுடைய முடிவு இல்லை. அது முழுக்க முழுக்க இயக்குநரின் முடிவு. பழைய நினைவுகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர்கள் அப்படி கேட்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸில் 8 சீசன்களாக தொடர்ந்து வெற்றிபெறும் ஆண் போட்டியாளர்கள் – எந்த மொழியில் தெரியுமா?

இணையத்தில் கவனம் பெறும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பேச்சு:

Also Read… அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ் இருந்தது… ஆனால் அவர் என்ன தங்கச்சினு சொல்லிட்டாரு – பிரபல நடிகை ஓபன் டாக்