கட்டா குஸ்தி 2 படப்பிடிப்பு தளத்தில் விஷ்ணு விஷாலுக்கு கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு – என்ன காரணம் தெரியுமா?
Gatta Kusthi 2 Movie Team: தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகராக அறிமுகம் ஆகி 17 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையும், சமீபத்தில் அவருக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக கட்டா குஸ்தி 2 படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இயக்குநர் சுசீந்திரன் எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான ஆர்யன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி இவரது நடிப்பில் இரண்டு வானம், மோகந்தாஸ் மற்றும் கட்டா குஸ்தி 2 ஆகியப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றது.
கட்டா குஸ்தி 2 படப்பிடிப்பு தளத்தில் விஷ்ணு விஷாலுக்கு கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு:
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சினிமாவில் விருது வென்றவர்களின் பட்டியளை வெளியிட்டது. அதில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசை அறிவித்தது. மேலும் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக அறிமுகம் ஆன வெண்ணிலா கபடிகுழு படம் 17 ஆண்டுகளை கடந்துள்ளது. அதன்படி விருது வென்றதற்காகவும் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் 17 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காகவும் கட்டா குஸ்தி 2 படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… AA23 Movie: அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 – கதாநாயகி யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Team #GattaKusthi2 celebrated #VishnuVishal winning the TN State Award for Best Actor and also for completing 17 years in cinema ❤️ pic.twitter.com/yvNV4RdYdM
— AmuthaBharathi (@CinemaWithAB) January 31, 2026
Also Read… Samantha: வளரும் வயதில் என்னை ஊக்குவிக்க யாருமில்லை… சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு!