ரஜினிகாந்த் முதல் அமீர் கான் வரை… இணையத்தில் கவனம் பெறும் கூலி பட நடிகர்களின் சம்பள விவரம்

Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. முதல் காட்சியில் இருந்தே கூலி படத்தை மிகவும் மகிழ்ச்சியாக ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் முதல் அமீர் கான் வரை... இணையத்தில் கவனம் பெறும் கூலி பட நடிகர்களின் சம்பள விவரம்

கூலி

Published: 

14 Aug 2025 08:28 AM

கோலிவுட் சினிமாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. ஆனால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்திருந்த ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Sperstar Rajinikanth) நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திற்காகதான். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததில் இருந்து படத்தின் வெளியீட்டிற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் டிக்கெட் முன்பதிவிலும் ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமுடன் இருந்தனர் என்பது குறித்த செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் இத்தனை நாள் காத்திருப்பிற்கும் தற்போது முடிவு வந்துள்ளது. ஆம் இன்று 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு உலகம் முழுவதும் கூலி படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கூலி படத்தை அதிகாலை காட்சியே பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அதிகாலை காட்சியைப் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல கொண்டாடுவதையும் சமூக வலைதளங்களில் காண முடிகின்றது.

கூலி படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வரும் நிலையில் கூலி படத்தில் நடித்த முக்கிய நடிகர்களின் சம்பள விவரம் தற்போது இணையத்தில் வெளியாகை வைரலாகி வருகின்றது. அதன்படி கூலி படத்தில் நாயகனாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்திற்காக சுமார் ரூபாய் 200 கோடிகள் சம்பளத்தைப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர் கான் கூலி படத்தில் 15 நிமிட காட்சிகளில் நடிப்பதற்காக சுமார் ரூபாய் 20 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளார். தொடர்ந்து நடிகர் நாகர்ஜுனா கூலி படத்தில் வில்லனாக நடிப்பதற்காக ரூபாய் 10 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் உபேந்திரா ராவ் ரூபாய் 5 கோடி சம்பளமும், நடிகர் சௌபின் ஷாகிர் ரூபாய் 1 கோடி சம்பளமாக பெற்றதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

Also Read… திரையுலகில் 50 ஆண்டுகள்…. ரஜினிகாந்த்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து

கூலி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்… வாழ்த்தும் பிரபலங்கள்!