கோலிவுட் முதல் பாலிவுட் வரை நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
Theatre Release Movies: பான் இந்திய சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நாளை டிசம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

படங்கள்
அங்கம்மாள்: இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ள படம் அங்கம்மாள். இந்தப் படத்தில் நடிகை கீதா கைலாசம் முன்னணி வேடத்தி நடித்து உள்ளார். இவர் முன்னதாக பல ஹிட் படங்களில் நாயகனின் அம்மாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை படத்தில் அவரது அம்மாவாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கீதா கைலாசம் கதையின் நாயகியாக நடித்துள்ளார் இவருடன் இணைந்து நடிகர்கள் சரண் சக்தி, யாஸ்மின், பரணி, தென்றல் ரகுநாதன், வினோத் மற்றும் முல்லையரசி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி பேசும் இந்தப் படம் நாளை 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அங்கம்மாள் படத்தின் ட்ரெய்லர் இதோ:
அகாண்டா 2: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தொடர்ந்து சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் அகாண்டா. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ஃபேண்டசி ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் நாளை 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அகாண்டா 2 படத்தின் ட்ரெய்லர் இதோ:
கலம்காவல்: மலையாள சினிமாவில் இயக்குநர் ஜித்தின் கே ஜோஷ் எழுதி இயக்கி உள்ள படம் கலம்காவல். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் விநாயகன், ஜிபின் கோபிநாத், காயத்ரி அருண், ரஜிஷா விஜயன், ஸ்ருதி ராமச்சந்திரன், அஜீஸ் நெடுமங்காட், அரவிந்த் எஸ்.கே, பிஜு பப்பன், ஹரிசங்கர் எஸ்.ஜி., ஆர்.ஜே. சூரஜ், தன்யா அனன்யா, அபி சுஹானா, நிசா, திரிவேதா, ஸ்மிதா, அனுபமா, சிந்து மாளவி வர்மா, வயிஷ் மாளவி வர்மா பாத்திமா, சீமசிந்துகிருஷ்ணா, கபானி, தியா, அமிர்தா, முல்லை அரசி, கேத்தரின் மரியா, மேகா தாமஸ், பின்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் நாளை 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கலம்காவல் படத்தின் ட்ரெய்லர் இதோ:
துரந்தர்: இயக்குநர் ஆதித்ய தார் எழுதி இயக்கி உள்ள படம் துரந்தர். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், ஆர். மாதவன், சாரா அர்ஜுன், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, மானவ் கோஹில், கீத் செக்வேரா, நவீன் கௌஷிக், மஷ்ஹூர் அம்ரோஹி, டேனிஷ் பாண்டோர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் நாளை 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.