Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை… இந்த வார ஓடிடி லிஸ்ட்!

Watch To Watch: கோலிவுட் சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அந்தப் படம் வெளியானதில் இருந்து நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியிடும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை… இந்த வார ஓடிடி லிஸ்ட்!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 May 2025 18:53 PM

ஜாலியோ ஜிம்கானா: நடிகர் பிரபு தேவா (Actor Prabhu Deva) நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ஜாலியோ ஜிம்கானா (Jolly O Gymkhana). இந்தப் படத்தை இயக்குநர் சக்தி சிதம்பரம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பிரபு தேவா உடன் இணைந்து நடிகர்கள் மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், ஜான் விஜய், சாய் தீனா, மதுசூதன் ராவ் மற்றும் யாஷிகா ஆனந்த் என பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்திருந்தார். இதில் வந்த பாடலக்ளும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 22-ம் தேதி நவம்பர் மாதம் 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அதன்படி படம் நாளை மே மாதம் 15-ம் தேதி 2025-ம் ஆண்டு ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தி டோர்: நடிகை பாவனா நடிப்பில் உருவாகியுள்ள படம் தி டோர். இயக்குநர் ஜெய் தேவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை பாவனா உடன் இணைந்து நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீரஞ்சனி, ஜெயபிரகாஷ் கபில் வேலன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. அதனபடி படம் வருகின்ற மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகவுள்ளது. நடிகை பாவனா நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் நடிப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேசிப்பாயா: இயக்குநர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் வெளியான படம் நேசிப்பாயா. இந்தப் படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி நாயகனாகவும் நடிகை அதிதி சங்கர் நாயகியாகவும் நடித்டிருந்தார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 4 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. அதன்படி படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.