கூலி முதல் காந்தாரா வரை… 2025-ல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்கள்

South Indian Movies: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. அந்த வகையில் அடுத்தடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய நடிகர்களின் படங்களின் தொகுப்பையும் தற்போது பார்க்கலாம்.

கூலி முதல் காந்தாரா வரை... 2025-ல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்கள்

படங்கள்

Published: 

13 Jun 2025 23:30 PM

கூலி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திர ராவ், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைபாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று அரும் நிலையில் தற்போது படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

காந்தார அத்தியாயம் 1: இயக்குநர் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி வரும் படம் காந்தார அத்தியாயம் 1. இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டியே நாயகனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் முதல் பாகமான காந்தாரா வெளியானபோது கன்னட மொழி படத்தை அடுத்த தரத்திற்கு உயர்த்திய படம் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி உடன் இணைந்து நடிகர்கள் ஜெயராம், ராகேஷ் பூஜாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் மற்றும் சாலுவே கவுடா ஆகியோர் இணைந்து தயாரிதுள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ர அக்டோபர் மாதம் 2-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி ராஜா சாப்: இயக்குநர் மாருதி எழுதி இயக்கி உள்ள படம் தி ராஜா சாப். இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடிகர்கள் நடிகர்கள் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சஞ்சய் தத், ரித்தி குமார், அனுபம் கெர், முரளி ஷர்மா என பலர் நடித்துள்ளனர்.

காதல் நகைச்சுவை திகில் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை பீப்பில் மீடியா கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.