மேத்திவ் தாமஸின் லவ்லி படக்குழுவிற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய நான் ஈ படக்குழு!
Malayalam Lovely Movie: மலையாள சினிமாவில் சமீபத்தின் நடிகர் மேத்திவ் தாமஸ் நடிப்பில் வெளியான படம் லவ்லி. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே நான் ஈ படத்தின் காப்பியா என்ற சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் தற்போது நான் ஈ படக்குழு லவ்லி படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

லவ்லி
மலையாள சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் ஷ்யாம் புஷ்கரனால் எழுதி இயக்கப்பட்ட கும்மளங்கி நைட்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் மேத்திவ் தாமஸ் (Actor Mathew Thomas). அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த நடிகர் மேத்யூ தாமஸ் தமிழில் 2023-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இவர் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் (Actor Vijay) மற்றும் த்ரிஷாவின் மகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலு தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் மேத்யூ தாமஸ். இந்த நிலையில் இவரது நடிப்பில் மலையாளத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லவ்லி.
இந்த லவ்லி படத்திற்கு நடிகர் நானியின் நடிப்பில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நான் ஈ படத்தை லவ்லி படக்குழுவினர் காப்பியடித்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே இந்த சர்ச்சை கிளம்பியது.
ஆனால், படத்தின் நடிகர் மேத்திவ் தாமஸ் உட்பட படக்குழுவினர் இது ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படம் மாதிரி இருக்காது. முற்றிலும் வேறுபட்ட கதையாக இந்தப் படம் இருக்கும் என்று பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லவ்லி படத்திற்கு எதிராக நோட்டீஸ் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லவ்லி படத்திற்கு எதிராக நான் ஈ படக்குழு அனுப்பிய நோட்டீஸ்:
நடிகர் மேத்திவ் தாமஸ் நடிப்பில் கடந்த 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லவ்லி. இந்தப் படத்தை இயக்குநர் திலீஷ் நாயர் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மேத்திவ் தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் சிவாங்கி கிருஷ்ணகுமார், மனோஜ் கே ஜெயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் லவ்லி படத்திற்கு எதிராகா நடிகர் நானியின் நடிப்பில் வெளியான நான் ஈ படக்குழு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நான் ஈ படத்தில் பயன்படுத்தப்பட்ட ஈ -யின் உருவ அமைப்பை அப்படியே லவ்லி படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும், இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.