வதந்திகளை நம்பாதீர்கள்… துல்கர் சல்மான் சொன்ன விசயம்!

Dulquer Salmaan: மலையால சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்திகளை நம்பாதீர்கள்... துல்கர் சல்மான் சொன்ன விசயம்!

துல்கர் சல்மான்

Published: 

21 Sep 2025 16:26 PM

 IST

சினிமாவில் பிரபல நடிகாராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் மலையாள சினிமாவில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்து இருந்தார். இவருகு சிறு வயதில் வௌவால்கள் கூட்டம் கடித்துவிடுகிறது. அதனைத் தொடர்ந்து இவரது உடலில் அதீத சக்தி பிறக்கிறது. அதன்பிறகு இவருக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் நடிகர்கள் நஸ்லேன், டொவினோ தாமஸ், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, விஜயராகவன், சந்து சலிம்குமார், ரகுநந்த் பலேரி, ஷிவஜித் பத்மநாபன், ஜெயின் ஆண்ட்ரூஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இதில் கேமியோ ரோலில் நடிகர்கள் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் மற்றும் சௌபின் ஷாகிர் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் படத்தில் மூத்தோனாக நடிகர் மம்முட்டியின் குரல் மட்டும் பயன்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் டாம்னிக் அருண் இயக்கி இருந்தார். மேலும் டாம்னிக் அருண் உடன் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதையை சந்தியா பாலசந்திரன் எழுதி இருந்தார். தொடர்ந்து 5 பாகங்களாக இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 250 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்து மலையாள சினிமாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் வெளியாகி 24 நாட்களை கடந்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஓடிடி வெளியீட்டிற்கு என்ன அவசரம் – துல்கர் சல்மான்:

இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வைரலாகி வந்தது. இந்த நிலையில் லோகா படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, லோகா விரைவில் OTT-க்கு வரப்போவதில்லை. போலி செய்திகளைப் புறக்கணித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருங்கள். என்ன அவசரம் என்று அந்தப் பதிவில் நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இளைஞர்கள் நிச்சயமா வாழ்க்கை பற்றி மேனிஃபெஸ்ட் பண்ணனும் – தனுஷ் கொடுத்த அட்வைஸ்

துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நிறைவடைந்தது கௌதம் கார்த்திக்கின் ரூட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு