Kaantha: திரையரங்க வெற்றி… சிம்பிளாக வெற்றிவிழாவை கொண்டாடிய காந்தா படக்குழு!

kaantha Movie Success Meet: தமிழ் சினிமாவில் கடந்த 2025 நவம்பர் 14ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் காந்தா. இந்த படத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ராணா இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், இதன் வெற்றியை படக்குழு இணைந்து கொண்டாடியுள்ளனர்.

Kaantha: திரையரங்க வெற்றி... சிம்பிளாக வெற்றிவிழாவை கொண்டாடிய காந்தா படக்குழு!

காந்தா படக்குழு

Published: 

18 Nov 2025 17:38 PM

 IST

பிரபல இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கத்தில், கடந்த 2025 நவம்பர் 14ம் தேதியில் வெளியான படம் காந்தா (Kaantha). இந்த படமானது மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashre Borse) இணைந்து நடித்திருந்தார். இவருக்கு இதுதான் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது 1960ம் மாநாடுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை உதாரணமாக கொண்டு, வித்தியாசமான கதையில் உருவாகியிருந்தது. இந்த படமானது முற்றிலும் ரெட்ரோ காலத்து மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி தான் மிக முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இந்த படமானது ஹீரோவிற்கு வில்லனுக்கு இடையே இருக்கும் ஈகோ பிரச்சனையை அடிப்படையாக கொண்டுதான் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்படமானது வெளியாகி 4 நாட்களான நிலையில், மொத்தமாக சுமார் ரூ 26 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்புகள் கிடைத்த நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழு இணைந்து கொண்டாடியுள்ளனர். இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் அனைவரும் இணைந்து சிம்பிளாக கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கருப்பு படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

காந்தா பட வெற்றி விழா கொண்டாடியது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிப்பு சக்கரவர்த்தி துல்கர் சல்மான்:

நடிகர் துல்கர் சல்மான் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமான நாயகன். இவருக்கு பல்வேறு மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம். அந்த அளவிற்கு இவரின் நடிப்பிற்கு ரசிகர்களால் உண்டு. இந்த ரசிகர் கூட்டத்தை மேலும் அதிகரிக்கும் விதத்தில் அவர் கொடுத்த படம்தான் காந்தா. இந்த படத்தில் துல்கர் சல்மான் “திருச்செங்கோடு காளிதாச மகாதேவன்” என்ற வேடத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் குமாரி என்ற வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: 17 நாட்கள் நான்ஸ்டாப் படப்பிடிப்பு – மகுடம் படம் குறித்து விஷால் வெளியிட்ட சூப்பர் அப்டேட்

இப்படம் ஒரு இயக்குநர் மற்றும் நடிகருக்கு இடையே இருக்கும் ஈகோ பிரச்னை தொடர்பான கதையில் உருவாகியுள்ளது. அதிலும் இப்படத்தில் துல்கர் சல்மானை கண்ணாடி முன்னே ஒரு கடைசியில் நடிப்பார் அதை பார்ப்பதற்கு அப்படியே புல்லரித்துவிடும். அது போல் நடித்திருந்தார். இவரின் நடிப்பில் வெளியான படங்களிலே இவர் பிரம்மதமாக நடித்திருக்கும் படத்தில் இது முதலில் இருக்கும். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையிடப்பட்டுவருகிறது.

ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?
முட்டி அளவு நீர்.. தாய்லாந்து உணவகத்தில் குவியும் வாடிக்கையாளர்கள்..
இத்தாலியில் திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு சிறப்பு சலுகைகள்..
‘சாட்ஜிபிடி கோ’ ஓராண்டுக்கு இலவசம்.. இந்தியர்களுக்கு பயனர்களுக்கு சலுகை!