Kaantha: பறக்கும் பாசிடிவ் விமர்சனம்… துல்கர் சல்மான்- பாக்யஸ்ரீ போர்ஸின் காந்தா பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Kaantha First Day Collection: தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகனாக வளர்ந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக வெளியானது காந்தா. இந்த திரைப்படமானது முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Kaantha: பறக்கும் பாசிடிவ் விமர்சனம்... துல்கர் சல்மான்- பாக்யஸ்ரீ போர்ஸின் காந்தா பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

காந்தா

Published: 

15 Nov 2025 16:59 PM

 IST

நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல நடிகராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் மலையாள சினிமாவின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானாலும், தமிழ் மக்களிடையே இவருக்கு அதிக வரவேற்புகள் இருந்துவருகிறது. இவரும் தனது தந்தை மம்முட்டி போலவே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அந்த வகையில் இவர் மற்றும் நடிகர் ராணா டகுபதியின் (Rana Daggubati) தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான் காந்தா (Kaantha). இந்த படத்தில் துல்கர் சலம்னா கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது வித்தியாசமான காதல், சினிமா மற்றும் வருமானவரி தொடர்பான கதைக்களத்தில் உருவாகியிருந்தது.

இப்படம் கடந்த 2025 நவம்பர் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியான நிலையில், முதல் நாள் முடிவில் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?. இப்படம் முதல் நாளில் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 10. 5 கோடிகளை வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சுந்தர் சி-யின் கருத்து… எனது நட்சத்திரம் விரும்பும் கதையை எடுப்பதுதான் எனக்கு நன்மை – கமல்ஹாசன் பேச்சு!

காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவு :

நடிப்பினால் தமிழ் ரசிகர்களை கொள்ளையடித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான், “திருச்செங்கோடு காளிதாச மகாதேவன்” (TKM) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரமானது தமிழ் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் (MKT) கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ளது. மேலும் இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் “குமாரி” என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு இப்படத்தின் அருமையாக வந்திருப்பதாக அனைவரும் கூறுகின்றனர். இவருக்கு இதுதான் தமிழில் முதல் திரைப்படம் என்றாலும், தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எனக்கு அப்பா மாதிரி.. எமோஷனலாக பேசிய தனுஷ்!

இந்த படத்தில் நடிகை பாக்யஸ்ரீயின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. அவரின் கண்களாலே நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பதாக படத்தை பார்த்த அனைவரும் தெரிவிக்கின்றனர். அப்படியே பழம்பெரும் நடிகையின் நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறுகின்றனர். இப்படமானது 1960ம் ஆண்டுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தினை உந்துதலாக கொண்டு வித்தியாசமான முறையில் உருவாகியிருப்பதாக கூறபடுகிறது. மேலும் துல்கர் சல்மானுக்கு வெற்றிகரமாக படங்கள் அமைந்துவிடும் நிலையில், இவரின் படங்களின் மீதான எதிர்பார்ப்புகளும் மேலும் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories