Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sarathkumar : சரத்குமாரின் பிறந்தநாள்.. ‘டியூட்’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

Sarathkumars Birthday Special Dude Movie Poster : நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முன்னணி நடிப்பில் தயாராகிவரும் படம் டியூட். இப்படத்தில் சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று 2025, ஜூலை 14ம் தேதியில் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, டியூட் படக்குழு நியூ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

Sarathkumar : சரத்குமாரின் பிறந்தநாள்.. ‘டியூட்’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
சரத்குமாரின் டியூட் படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Jul 2025 22:23 PM

கோலிவுட் சினிமாவில் வில்லனாக நடிக்கத் துவங்கி, முன்னணி ஹீரோவாக மாறியவர் சரத்குமார் (Sarathkumar). இவர் தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் 3BHK. . இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தின் (Siddharth) அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஜூலை 4ம் தேதியில் வெளியான நிலையில், தற்போதுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து நடிகர் சரத்குமார் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம்தான் டியூட் (Dude). நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan 4வது திரைப்படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று 2025, ஜூலை 14ம் தேதியில் சரத்குமாரின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு நியூ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் “வின்டேஜ் நாட்டாமை இஸ் பேக்” (Our vintage Naataamai is back ) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வேஷ்டி சட்டையில், சைக்கிளில் இருக்கும்படி நடிகர் சரத்குமார் இருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சித்தார்த்தின் ‘3BHK’: வாழ்த்திய ‘கோலங்கள்’ சீரியல் குழு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டியூட் படக்குழு வெளியிட்ட சரத்குமாரின் நியூ போஸ்டர் :

டியூட் திரைப்படத்தின் ரிலீஸ் :

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துவரும் திரைப்படம்தான் டியூட். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடிகர் சரத்குமார், ரோகினி மற்றும் ஹிருது ஹூரான் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இதையும் படிங்க : ரஜினியுடன் இணையும் ‘மகாராஜா’ பட இயக்குநர்? – ரசிகர்கள் ஹேப்பி!

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்தில் இதுவரை சுமார் 3 பாடல்கள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமானது அதிரடி காதல் கதைக்களத்துடன் உருவாகிவருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில்,இப்படம் வரும் 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு ரிலீஸ் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.