டியூட் படத்தின் 3-நாள் வசூல் எவ்வள்வு தெரியுமா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Dude Movie: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் டியூட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 3 நாட்களைக் கடந்துள்ள நிலையில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

டியூட் படத்தின் 3-நாள் வசூல் எவ்வள்வு தெரியுமா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

டியூட்

Published: 

20 Oct 2025 18:31 PM

 IST

கோலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). அதன்படி நடிகர் பிரதீப் ரங்கநாதன் முதலில் தான் இயக்கிய லவ் டுடே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகனாக அறிமுகம் ஆனார். இளம் தலைமுறையினரின் காதலை காமெடி பாணியில் மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வரவேற்பைப்பிற்கு பிறகு அவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நாயகனாகவும் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தனது உருவத்தால் பல கேலிகளை சந்தித்த பிரதீப் ரங்கநாதனின் உழைப்பு அவரை மேலும் மேலும் சினிமாவில் உயரத்திற்கு கொண்டு சென்றது என்றே கூறலாம்.

இந்த நிலையில் தொடர்ந்து மற்ற இயக்குநர்களில் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் பிரதீப் ரங்கநாதன். அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார். இவர் முன்னதாக ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிராகன் படம் பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

3 நாட்களில் ரூபாய் 66 கோடிகளை வசூலித்தது டியூட் படம்:

இந்த நிலையில் டிராகன் படத்தை தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் டியூட். இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் படம் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி 3 நாட்களில் ரூபாய் 66 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்

டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இது சமந்தாவின் தீபாவளி கொண்டாட்டம் – வைரலாகும் போட்டோஸ்