பிக்பாஸ் தமிழில் இதுவரை எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் கோப்பையை வென்றார்கள் தெரியுமா? லிஸ்ட் இதோ

Bigg Boss Tamil: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் ரியால்டி ஷோதான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த நிலையில் இதுவரை எத்தனை ஆணகள் மற்றும் எத்தனை பெண்கள் கோப்பையை வென்றுள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பிக்பாஸ் தமிழில் இதுவரை எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் கோப்பையை வென்றார்கள் தெரியுமா? லிஸ்ட் இதோ

பிக்பாஸ்

Published: 

21 Sep 2025 18:48 PM

 IST

தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே நன்கு வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கிய பிறகு மற்ற நிகழ்ச்சியகளை ஓரம்கட்டியது என்றே சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது என்றால் மற்ற சேனல்களில் ஹிட் சீரியல்களின் நிகழ்ச்சிகளின் நேரம் மாற்றப்படும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தொடர்ந்து பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் பலர் தற்போது சினிமாவில் தற்போது நல்ல இடத்தில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 9-வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட உள்ளதை நிகழ்ச்சி குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதுவரை கோப்பையை வென்றவர்கள் யார் யார்?

இந்த நிலையில் இதுவரை 8 போட்டிகளில் எத்தனை ஆண்கள் மற்றும் எத்தனை பெண்கள் இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளனர் என்பது குறித்துப் பார்க்கலாம். மொத்தம் உள்ள 8 சீசன்களில் 6 சீசன்களில் ஆண்கள் போட்டியாளர்களும் 2 சீசன்களின் பெண் போட்டியாளர்களும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

அதன்படி 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான முதல் சீசனில் ஆரவ் வெற்றிக் கோப்பையை வென்றால். 2018-ம் ஆண்டு ஒளிபரப்பான இரண்டாவது சீசனில் ரித்விகா வெற்றிக் கோப்பையை வென்றார். 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான மூன்றாஅவது சீசனில் முகேன் ராவ் வெற்றிக் கோப்பையை வென்றார். 2020-ம் ஆண்டு ஒளிபரப்பான நான்காவது சீசனில் ஆரி அர்ஜூனன் வெற்றிக் கோப்பையை வென்றார். 2021-ம் ஆண்டு ஒளிபரப்பான ஐந்தாவது சீசனில் ராஜூ ஜெயமோகன் வெற்றிக் கோப்பையை வென்றார். 2022-ம் ஆண்டு ஒளிபரப்பான ஆறாவது சீசனில் அசீம் வெற்றிக் கோப்பையை வென்றார். 2023-ம் ஆண்டு ஒளிபரப்பான ஏழாவது சீசனில் அர்ச்சனா வெற்றிக் கோப்பையை வென்றார். 2024-ம் ஆண்டு ஒளிபரப்பான எட்டாவது சீசனில் முத்துகுமரன் வெற்றிக் கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… இளைஞர்கள் நிச்சயமா வாழ்க்கை பற்றி மேனிஃபெஸ்ட் பண்ணனும் – தனுஷ் கொடுத்த அட்வைஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நிறைவடைந்தது கௌதம் கார்த்திக்கின் ரூட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு