Marshal: மார்ஷல் பட ரிலீஸ் எப்போது? கதை இதுதான்! – இயக்குநர் தமிழ் கொடுத்த அப்டேட்!
Director Tamizh About Marshal Movie: கார்த்தியின் நடிப்பில் மற்றும் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் மார்ஷல். இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் மற்றும் படத்தின் கதை குறித்து இயக்குநர் தமிழ் தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

கார்த்தியின் மார்ஷல் திரைப்படம்
தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மக்கள் மத்தியில் நெருக்கமான நடிகராக இருந்துவருபவர் கார்த்தி (Karthi). இவர் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாகவே படங்களில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) ஜோடியாக நடித்திருந்தார். இது கடந்த 2026 ஜனவரி 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தனது நடிப்பில் படங்களை வைத்திருக்கிறார் கார்த்தி. இதில் டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் (Tamizh) இயக்கத்தில், கார்த்தி நடித்துவரும் படம்தான் “மார்ஷல்” (Marshal). இது ஒரு கடற்கரை சார்ந்த வித்தியாசமான கதையில் தயாராகிவருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கட்டத்தை கடந்த நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கார்த்தி நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விருதுவழங்கும் நிகழ்ச்சியில் பேசியிருந்த இயக்குநர் தமிழ், மார்ஷல் பட கதை மற்றும் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் நிச்சயம் பவர்ஃபுல்லாக இருக்கும் – ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
மார்ஷல் திரைப்படம் குறித்து இயக்குநர் தமிழ் கொடுத்த அப்டேட்:
அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் தமிழ் பேசுகையில், “மார்ஷல் படத்தின் இரண்டு ஷெட்யூல் முடிந்தது. கிட்டத்தட்ட 48 நாட்கள் ஷூட்டிங் முடிந்தது. மீண்டும் வரும் 2026 ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து ஆரம்பிக்கிறோம். படம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வந்துவிடும். இந்த படமானது 1965ம் ஆண்டுகளில் நடக்கும் ஒரு கதை, ஒரு பீரியட் திரைப்படம்” என்று அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார். தற்போது இந்த் தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
மார்ஷல் திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Dear Friends,
Taking a new step forward with all your love and blessings!! #Marshal #மார்ஷல் begins from today!! pic.twitter.com/KzxDxRpYRa
— Karthi (@Karthi_Offl) July 10, 2025
கார்த்தியின் நடிப்பில் தயாராகி வெளியாகாத படம் :
நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வா வாத்தியார் என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது அவருக்கு கலவையான விமர்சனத்தையே கொடுத்தது. இப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் சர்தார் 2. இதை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்க, கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்ற விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் பதிவு!
இதன் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. மேலும் இப்படத்தின் சில காட்சிகள் இன்னும் எடுக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இப்படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அநேகமாக இந்த 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.