ஏய் சண்டக்காரா… 10 வருடங்களைக் கடந்தது இறுதிச்சுற்று படம்!
10 Years Of Irudhi Suttru Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இறுதிச் சுற்று. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இறுதிச்சுற்று படம்
தமிழ் சினிமாவில் கடந்த 29-ம் தேதி ஜனவரி மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் இறுதிச் சுற்று. இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ரித்திகா சிங் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் இவர் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் மும்தாஜ் சோர்கார், நாசர், ராதா ரவி, எம்.கே. ரெய்னா, ஜாகீர் உசேன், காளி வெங்கட், பல்ஜிந்தர் கவுர், வெங்கடேசன் தேவராஜன், சஞ்சனா நடராஜன், பிபின், ரவீந்திர விஜய் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான யுடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ். சசிகாந்த் மற்றும் சி. வி. குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Also Read… அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள வா வாத்தியார் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இறுதிச்சுற்று படத்தின் கதை என்ன?
நடிகர் மாதவன் பாக்ஸிங் கோச்சாக உள்ள நிலையில் அவர் சென்னையில் உள்ள மீனவ பகுதிக்கு மாணவர்களுக்க்கு கோச்சிங் செய்ய வருகிறார். அங்கு ரித்திகா சிங்கின் அக்கா பாக்ஸிங் கோச்சிங்கில் இருக்கிறார். ஆனால் மாதவனுக்கு மீன் வியாபாரம் செய்யும் ரித்திகா சிங்கிற்கு பாக்ஸிங் திறமை உள்ளதை தெரிந்துகொண்டு அவரை கஷ்டப்பட்டு பாக்ஸிங்குற்குள் வரவைக்கிறார். அதன்பிறகு பாக்ஸிங் மீது அவருக்கு ஆர்வத்தை தூண்டி அவரை பாக்ஸிங்கில் எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் நல்ல வரவேறபைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.