தளபதி விஜய் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா சொன்ன விசயம்… வைரலாகும் தகவல்
Director Sudha Kongara: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக இவரது இயக்கத்தில் பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதா கொங்கரா
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏன் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த இயக்குநர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அது மட்டும் இன்றி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் மிகவும் வலிமையானதாக காட்டப்படும். அதன்படி சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகும் படங்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் பராசக்தி.
இந்தப் படம் வருகின்ற 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீரியட் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீ லீலா, அதர்வா, ரவி மோகன், பேசில் ஜோசஃப், ராணா டகுபதி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தளபதி விஜய் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா சொன்ன விசயம்:
உங்கள் அனைவருக்கும் தெரிந்தபடி, நான் ஒரு தீவிர விஜய் ரசிகை. அவருடைய படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு நான் மூன்று பேரை என்னுடன் அழைத்துச் செல்வேன், ஏனென்றால் எனக்கு விசில் அடிக்கத் தெரியாது. மாஸான காட்சிகள் வரும்போதெல்லாம் அவர்களை விசில் அடிக்கச் சொல்வேன். ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நான் நிச்சயமாகப் பார்ப்பேன்.
அந்த மாதிரியான சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். மணி சார் இயக்கும் சினிமாக்களும் எனக்குப் பிடிக்கும். வெளியீட்டுத் தேதி குறித்து நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். அது ஒரு திருவிழா போன்றது. அதை நான் ஒரு பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இத்தனை படங்களுக்கும் இங்கே இடம் இருக்கிறது என்று நான் உணர்கிறேன் என்று சுதா கொங்கரா தெரிவித்து இருந்தார்.
Also Read… கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்தப் படம் இப்படிதான் இருக்குமாம் – என்ன சொல்லி இருக்கார் பாருங்க
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#SudhaKongara in a Recent Interview ⭐:
• As you all know, I’m a huge Vijay fan..🔥 I take three people with me for his film’s first-day, first show because I don’t know how to whistle—I ask them to whistle whenever a mass scene comes.. I will definitely watch FDFS of… pic.twitter.com/0K0SRVJyGW
— Laxmi Kanth (@iammoviebuff007) January 7, 2026
Also Read… வளர்ச்சி என்பது வசூல் ரீதியாக அல்ல, கதை விஷயத்தில் இருக்க வேண்டும் – இயக்குநர் சிதம்பரம்