அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடிக்க முதலில் ஒத்துக்கவே இல்லை – இயக்குநர் மிஷ்கின்
Director Mysskin: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் பட்டியளில் இருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான அஞ்சான் படத்தில் வில்லனாக நடிக்க முதலில் நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் பேட்டி ஒன்றில் கூறியது தற்போது வைரலாகி வருகின்றது.

பாண்டியராஜன், இயக்குநர் மிஷ்கின்,
இயக்குநர் மிஷ்கின் (Director Mysskin) இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அஞ்சாதே. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் நரேன் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் பிரசன்னா, அஜ்மல் அமீர், விஜயலட்சுமி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், பொன்வண்ணன், வெடிகுண்டு ரமேஷ், ஸ்ரீதர், எம்.எஸ்.பாஸ்கர், பிரியாஸ்ரீ, ஜாஸ்பர், பொங்கணேஷ், நரேன், ஸ்னிக்தா அகோல்கர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று தீவிரமாக கடின உழைப்பை போடும் அஜ்மல் அந்த தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் எந்த உழைப்பும் இல்லாமல் ரெகமெண்டேஷன் மூலம் நரேன் போலீஸாகிறார். உயிர் நண்பர்களாக இருந்த இவர்கள் அந்த விசயத்தால் பிறிகிறார்கள். இந்த நிலையில் போலீஸ் அதிகாரியான நரேன் அடுத்து என்ன செய்தார் என்பதே படத்தின் கதை.
அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடிக்க முதலில் ஒத்துக்கவே இல்லை:
இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் பிரசன்னா நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் வில்லன் கதாப்பாத்தில் நடித்து இருந்தார். முதலில் இந்த கதையை இயக்குநர் மிஷ்கின் பாண்டியராஜனிடம் சொன்னபோது அவர் அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். மேலும் இதில் மீசை இல்லாமல் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது முடியவே முடியாது என்று பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பிறகு அவரை ஒப்புக்கொள்ள வைத்து இந்தப் படத்தில் நடிக்க வைத்ததாகவும் படம் வெளியான பிறகு படத்தில் பாண்டியராஜனின் கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு இயக்குநர் மிஷ்கினை நேரில் அழைத்து அவர் மோதிரம் பரிசாக கொடுத்ததாக இயக்குநர் மிஷ்கின் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Also Read… 2-வதாக பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட்டாகி போவது இவரா? வைரலாகும் தகவல்