மாரி செல்வராஜ் உலகத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை – பைசன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி
Director Lingusamy: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான பைசன் காளமாடன் படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு படம் மற்றும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி ஒரு பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் லிங்குசாமி
தமிழ் சினிமாவில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் இயக்குநர் லிங்குசாமி (Director Lingusamy). இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகரக்ளிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் லிங்குசாமி. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இயக்குநராக லிங்குசாமி அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டைக்கோழி 2, தி வாரியர் ஆகியப் படங்களை இயக்கி உள்ளார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல லிங்குசாமி தயாரிப்பில் வெளியான தீபாவளி, பட்டாளம், பையா, வேட்டை, வழக்கு என் 18/9, கும்கி, சிலோன், இவன் வேறமாறி, கோலி சோடா, மஞ்சபை, சதுரங்க வேட்டை, அஞ்சான், உத்தம வில்லன், ரஜினி முருகன் என பலப் படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
பைசன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி:
இந்த நிலையில் சமீபத்தில் பைசன் காளமாடன் படத்தை திரையரங்குகளில் பார்த்த இயக்குநர் லிங்குசாமி படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பைசன் காளமாடனை மிகவும் நேசித்தேன், மாரி செல்வராஜ் உலகத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை, அவரது கைவினைத்திறன், வசனங்கள், குறிப்பாக அமீர் சார், பசுபதி மற்றும் லால் ஆகியோரின் கதாபாத்திரங்கள் மீதான அவரது ஆளுமை. துருவ் விக்ரமின் அபார முயற்சிகள் அவரை மிளிரச் செய்தன. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களும் இசையும் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
Also Read… கல்யாணை மாலை புது புது அர்த்தங்களை விட ப்ரோ கோட் படத்தில் தான் அதிக ஃபேமஸ் – எஸ்.ஜே.சூர்யா!
இயக்குநர் லிங்குசாமியின் எக்ஸ் தள பதிவு:
Loved #BisonKaalamaadan just couldn’t come out of @mari_selvaraj world, his command over the craft, dialogues, the characters especially that of #ameer sir, @PasupathyMasi, & @LalDirector. Huge efforts from #dhruvvikram, shine on brother. Also the songs & score from…
— Lingusamy (@dirlingusamy) October 19, 2025
Also Read… வீட்டுதலப் பதவியை சரியாக செய்யாத துஷார்… சரமாரியக கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி