Cinema Rewind : படையப்பா நீலாம்பரி ரோல் அவருடைய இன்ஸ்பிரேஷன்தான் – கே.எஸ். ரவிக்குமார் சொன்னது யார் தெரியுமா?
Director KS Ravikumar : தமிழ் சினிமாவில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரின் இயக்கத்திலும் நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பிலும் வெளியாகி ஹிட் கொடுத்த படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தைத் தொடர்ந்து நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரமும் அதிகம் பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்திற்கு இன்ஸ்பரேஷனாக இருந்தவர் பற்றி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் கே.எஸ். ரவிக்குமார் (KS Ravikumar) . இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் முதல் கமல் ஹாசன் (Rajinikanth to Kamal Haasan) வரை பல ஹிட் நடிகர்களின் படங்களை இவர் இயக்கியுள்ளார். இதில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), சிவாஜி கணேசன், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடிப்பில் வெளியான படம் படையப்பா ( Padayappa) . கடந்த 1999ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சவுந்தர்யா நடித்திருந்தார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியான இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் கதாபாத்திரம் எவ்வளவு பேசப்பட்டதோ, அதைப் போல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரமானது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு பெண் வில்லியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு அவர் அந்த படத்தில் ஒரு உதாரணமாக இருந்தார். இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் நடிப்பும் சரி, அந்த கதாபாத்திரமும் சரி அவரைத் தவிர வேறு யாருக்குமே செட் ஆகாது. அந்த விதத்தில் இந்த நீலாம்பரி கதாபாத்திரம் இருந்தது.
படையப்பா படத்தில் ரஜினியைப் போல, ரம்யா கிருஷ்ணனும் பிரபலத்தைப் பெற்றார். இந்நிலையில் இந்த நீலாம்பரி கதாபாத்திரம் யாரை இன்ஸ்பரரேஷனாக வைத்து உருவாக்கியது என்பதைப் பற்றி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார். அந்த இன்ஸ்பரேஷன் வேறு யாருமில்லை, மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாதான் என்று கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார். இதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சொன்ன விஷயம் :
முன்னதாக பேசிய நேர்காணலில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், படையப்பா படமானது வெளியானபோது, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா திரையரங்கத்தில் இருந்து ரீல் பெட்டியை வாங்கி வீட்டில் படத்தைப் பார்த்தாராம். அவரின் வீட்டில் தியேட்டர் போல செட்டப் எல்லாம் இருந்த நிலையில் படையப்பா படத்தின் ரீல் வாங்கி பார்த்துள்ளார். இந்த விஷயம் தெரிந்து எனக்குப் பயம் அதிகமாகிவிட்டது. அந்த படத்தை பார்த்துவிட்டு எதுவும் தவறாகச் சொல்லிவிடுவாரோ என்று எண்ணி நான் பயந்தேன். ஏனென்றால் நீலாம்பரி கதாபாத்திரத்தையே அவரை மனதில் வைத்துத்தான் எழுதினேன்.
ஒரு பெண்ணாக எவ்வாறு தைரியமும், தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும் என்று நினைத்துத்தான் நான் எழுதினேன். அந்த படத்தை பார்த்துவிட்டு என்னிடம் அவரின் உதவியாளர் ஒருவரிடம் போன் செய்து பேசினேன், அவர்தான் சொன்னார் அம்மா படத்தை பார்த்தார்கள். அருமையாக இருக்கிறது என்று கூறினார் என்று என்னிடம் கூறினார். எனக்கு அதைக் கேட்டவுடன் நிம்மதியே வந்தது. அதிலும் ஜெயலலிதாவிற்கு நீலாம்பரி கேரக்டர் அவ்வளவு பிடித்திருந்ததாம் என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஓபனாக பேசியுள்ளார்.