Keerthiswaran: டியூட் படத்தில் அந்த காட்சியெல்லாம் தூக்கிட்டேன்.. காரணம் இதுதான் – கீர்த்திஸ்வரன்!

Keerthiswaran Dude Deleted Scenes: இயக்கிய முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட இயக்குநர்களில் ஒருவர்தான் கீர்த்திஸ்வரன். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் டியூட். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தீஸ்வரன் இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தெரிவித்துள்ளார்.

Keerthiswaran: டியூட் படத்தில் அந்த காட்சியெல்லாம் தூக்கிட்டேன்.. காரணம் இதுதான் - கீர்த்திஸ்வரன்!

கீர்த்திஸ்வரன்

Published: 

27 Oct 2025 21:31 PM

 IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் டியூட் (Dude). இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகியிருந்தது. இப்படத்தை இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியிருந்தார். இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) உதவி இயக்குநராக இருந்துவந்த இவர், இந்த டியூட் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டியூட் படமானது 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரின் காம்போ இப்படத்தின் மிகவும் அருமையாக இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் கீர்த்திஸ்வரனின் முதல் படம் என்றாலும், மிகவும் பிரம்மாதமாக வந்திருக்கிறது.

கதை குறித்து பல விமர்சனங்கள் இப்படத்தின் மீது எழுந்தாலும், நடிப்பு குறித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீசிற்கு பிறகு நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கீர்த்திஸ்வரன் டியூட் படத்திலிருந்து சில காட்சிகள் நீங்கப்பட்டதாகவும், அதற்கான காரணம் பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பைசன் படத்திற்காக மாரி செல்வராஜிற்கு நன்றி தெரிவித்த அனுபமா பரமேசுவரன் – வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

டியூட் படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து கீர்த்திஸ்வரன் பகிர்ந்த விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் கீர்த்திஸ்வரன் டியூட் படம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர் டியூட் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் பற்றியும் தெரிவித்துள்ளார். அதில் கீர்த்திஸ்வரன் , ” நான் டியூட் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கிவிட்டேன். அது எந்தத் காட்சிகள் என்றால் பாரியும் (ஹிருது ஹூரன்) குறள் (மமிதா பைஜூ ) இருவரும் சந்திக்கும் காட்சியை நீக்கிவிட்டேன். அதற்கு காரணம் வந்து டைம் தான். படத்தின் நேரத்தை குறைக்கும் விதத்தில் அந்த காட்சியை நீக்கிவிட்டேன்.

இதையும் படிங்க: எல்லாத்துக்குமே முழு முதல் காரணம் சிவகார்த்திகேயன்தான் – ரியோ ராஜ் ஓபன் டாக்!

அந்த காட்சியில் அகன் (பிரதீப் ரங்கநாதன்) வேண்டாம் என்று சொன்னபிறகு குறள் பெங்களூருவிற்கு படிக்கச் செல்கிறார். அங்கு கல்லூரியில் பாரியை எப்படி சந்திக்கிறார் என்பதுதான் அந்த காட்சி. அந்த காட்சி இருந்திருக்கலாம் நேரம் அதிகமாக இருக்கும் காரணமாக அந்த காட்சியை நீக்கிவிட்டேன்” என அந்த நேர்காணலில் இயக்குநர் கீர்த்திஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டியூட் திரைப்படம் குறித்து கீர்த்திஸ்வரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த டியூட் படமானது ஆரம்பத்தில் மக்களிடையே நெகடிவ் விமர்சனங்களை பெற்றுவதாலும், சில நாட்களிலே மீண்டும் நல்ல விமர்சனங்களையும் பெறத்தொடங்கியது. இந்த படம் தற்போது உலகளாவிய வசூல் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.