ஜனநாயகன் படம் ரீமேக்கா? – முதன்முறையாக இயக்குநர் வினோத் விளக்கம்
Jana Nayagan Audio Release Event : நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநயாகன் படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படும் நிலையில் அது குறித்து இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எச்.வினோத் விளக்கமளித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ரீமேக் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத்
நடிகர் விஜய்யின் (Vijay) கடைசி படமான ஜனநயாகன் (Jananayagan) இசை வெளியீட்டு விழா தற்போது டிசம்பர், 27, 2025 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படும் நிலையில் அது குறித்து இசை வெளியீட்டு விழாவில் அவர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, இந்தப் படம் ரீமேக் என்று சொல்வார்கள். இந்தப் படத்தின் ரன் டைம் அதிகம் என்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இது தளபதி படம் என்றார்.
ஜனநாயகன் ரீமேக் படமா?
இந்தப் படம் குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வினோத், ஜனநாயகன் ரீமேக் படம் என்கிறார்கள். சிலர் அதனை பாதி ரீமேக் என்கிறார்கள். சிலர் இந்தப் படத்துடன் போட்டி போட்டு வெல்லலாம் என நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இந்தப் படம் 100 சதவிகிதம் தளபதி விஜய்யின் படம். இந்தப் படம் திரையரங்கில் கமர்ஷியல் விருந்தாக இருக்கும் என்றார். ஜனநாயகன் படம் முடிவல்ல தொடக்கம் என பேசினார்.
இதையும் படிக்க : Thalapathy Thiruvizha: ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா – அரங்கத்திற்கு வந்த தளபதி விஜய் – பூஜா ஹெக்டே…!
முன்னதாக பேசிய இசையமைப்பாளர் அனிருத், எனக்கு 21 வயதில் கத்தி பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் 2 படங்கள் மட்டுமே செய்திருந்தேன். இதுவரை என் இசை நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு கூட்டத்தை பார்த்தில்லை. கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ என நாங்கள் இணைந்த படங்கள் 100 சதவிகிதம் வெற்றிப் படமாக இருந்திருக்கிறது. ஜனநாயகன் படமும் வெற்றிப் படமாக இருக்கும் என்றார். முதன்முறையாக நான் வினோத்துடன் பணிபுரிகிறேன். அவர் மிகவும் இனிமையான மனிதர். அவரது படம் இந்த பொங்கலுக்கு சம்பவம் பண்ணும் என்றார்.
இந்த நிலையில் பிரபல நடன இயக்குநர்கள் பிரபு தேவா, ஷோபி, சாண்டி உள்ளிட்டோர் விஜய் முன்னிலையில் அவரது பாடல்களுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது பிரபு தேவா போக்கிரி படத்தில் இடம் பெற்ற ஆடுங்கடா என்ன சுத்தி பாடலுக்கு நடனமாடியது நிகழ்வின் ஹைலைட்டாக அமைந்தது.
இதையும் படிக்க : Jana Nayagan: ஜன நாயகன் ஆடியோ ரிலீஸ்… திருவிழா கொண்டாட்டத்தில் மலேசியா.. விஜய் மாஸ் எண்ட்ரி!
ஜனநயாகன் திரைப்படம் விஜய்யின் கடைசிப் படம் என கூறப்படும் நிலையில் இந்த இசை வெளியீட்டு விழா ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இசை வெளியீட்டு விழாவில் இசையின் ஆரம்ப கால படங்கள் முதல் தற்போது வரை பிரபலமான ஹிட் பாடல்களை பாடி அவருக்கு டிரிிபயூட் அளித்தனர்.