எந்த காட்சி எல்லாம் சென்சார் செய்யப்படும் என்ற அறிவு எச்.வினோத்திற்கு அதிகம் – இயக்குநர் ஈரா சரவணன்
Director Era Saravanan talks about H Vinoth: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் எச். வினோத். இவரது இயக்கத்தில் உருவான ஜன நயாகன் சென்சார் பிரச்சனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஈரா சரவணன் - எச்.வினோத்
தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருபவர் இயக்குநர் ஈரா. சரவணன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 09-ம் தேதி வெளியான கத்துக்குட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் நரேன் நாயகனாக நடிக்க நடிகை ஸ்ருஸ்டி டாங்கே நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஈரா சரவணன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி 2021-ம் ஆண்டு வெளியான படம் உடன்பிறப்பே. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து ஈரா சரவணன் இயக்கத்தில் கடந்த 20-ம் தேதி செப்டம்பர் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நந்தன். பொலிட்டிகள் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையேயும் பிரபலங்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் இரா சரவணன் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் ஈரா சரவணன் இயக்குநர் எச். வினோத் பற்றி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சென்சார் குறித்த அறிவு எச்.வினோத்திற்கு அதிகம் – ஈரா சரவணன்:
இயக்குநர் எச். வினோத் ஒரு நடுநிலைவாதி. அவர் ஒரு அரசியல் கட்சி, தலைவர் அல்லது சித்தாந்தத்தை ஆதரித்தாலும், தனது திரைப்படங்களை முடிந்தவரை நடுநிலையாகவே வழங்க விரும்புகிறார். எந்தெந்த விஷயங்களுக்குத் தணிக்கை செய்யப்படும், எவற்றுக்குச் செய்யப்படாது என்பது குறித்தும் அவருக்கு நூறு மடங்கு அதிக தெளிவு இருக்கிறது. ‘பகவந்த் கேசரி’ படத்தின் மூலக்கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் கூட, தணிக்கைத் துறையுடன் சிக்கல்களை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியமானவையாக இருந்திருக்காது. நான் அந்த விவாதங்களில் பங்கேற்றதால், இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… உலகம் முழுவதும் சிறை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியானது தகவல்
இணையத்தில் வைரலாகும் ஈரா சரவணன் பேச்சு:
Director @erasaravanan about #JanaNayagan
– The movie JanaNayagan has no problems #HVinoth is a very clear director.
– The core story of the film is taken from the movie #BhagavanthKesari.#ThalapathyVijaypic.twitter.com/T8UthmplHj— Movie Tamil (@_MovieTamil) January 22, 2026
Also Read… பர்த்டே பாய் டொவினோ தாமஸின் நடிப்பில் இந்த தல்லுமாலா படத்தை மிஸ் செய்யாதீர்கள்!