தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் – தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இயக்குநர் சேரன்

Director Cheran has extended his congratulations to actor Thalapathy Vijay | 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் பெரும்பான்மையில் வெற்றிப் பெற்ற நிலையில் அவருக்கு இயக்குநரும் நடிகருமான சேரன் தனது வாழ்த்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் - தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இயக்குநர் சேரன்

தளபதி விஜய்

Published: 

06 May 2026 14:39 PM

 IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் தளபதி விஜய். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உச்ச நடிகராக வலம் வந்து கொண்டு இருந்த நிலையில் தன்னை சினிமாவில் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் அதற்கு அதிகாரம் தேவை என்றும் தமிழ் நாட்டில் புதிதாக கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த கட்சியின் சார்பாக 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் தளபதி விஜய் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டார். இதில் 108 தொகுதிகளில் தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிப் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தளபதி விஜய் அவர்களுக்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பான் இந்திய சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான சேரன் அவர்கள் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இயக்குநர் சேரன்:

சேரன் கூறியதாவது, சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்… எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி. அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன். தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… கலைஞர் கனவில் கூட நினைத்து இருக்க மாட்ட்டார் – வைரலாகும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பதிவு

இயக்குநர் சேரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Kiara Advani: டாக்ஸிக் படத்தில் யாஷுடனான நெருக்கமான காட்சிகளை நீக்க சொன்னேனா? அதிரடி பதிலை கொடுத்த கியாரா அத்வானி!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..