Silamabarasan: ‘ஷூட்டிங்கிற்கு ரெடி’.. STR 51 திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட அஷ்வத் மாரிமுத்து!

STR51 Movie Update: தமிழில் ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக நுழைந்தவர் அஷ்வத் மாரிமுத்து. இவர் தற்போது சிலம்பரசனின் 51வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Silamabarasan: ஷூட்டிங்கிற்கு ரெடி.. STR 51 திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட அஷ்வத் மாரிமுத்து!

அஷ்வத் மாரிமுத்து, அர்ச்சனா கல்பாத்தி மற்றும் சிம்பு

Updated On: 

28 Feb 2026 20:05 PM

 IST

தமிழில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன் (Dragon). இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், கயாடு லோஹர் (kayadu Lohar)மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், மிக பிரம்மநடமான் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த் படத்தை அடுத்தாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, சிலம்பரசனுடன் (Silambarasan) புது திரைப்படத்தில் இணைவதாக அறிவித்திருந்தார். இந்த படத்திற்கு தற்காலிகமாக STR51 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த புது திரைப்படத்தை டிராகன் திரைப்படத்தை தயாரித்திருந்த ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் அர்ச்சனா கல்பாத்தி (Archana Kalpathi) தயாரிக்கவுள்ளார்.

இப்படமானது கடந்த 2025ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் இப்படமானது எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தின் ப்ரீ- புரொடக்ஷன்ஸ் பணிகளே 1 அனைத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் குறித்து இயக்குநர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் மத்தியில் கவனம்பெறும் விஜய் சேதுபதியின் ‘காட்டான்’ வெப் சீரிஸ் டீசர்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

சிலம்பரசனின் STR 51 திரைப்பட ஷூட்டிங் குறித்து அஷ்வத் மாரிமுத்து வெளியிட்ட பதிவு:

இந்த பதிவில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, “வலுவான வைப், படப்பிடிப்பிற்காக தயாராகிவிட்டோம். விரைவில் STR வருகை” என அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

STR 51 திரைப்படத்தின் கதாநாயகி யார் :

சிலம்பரசனின் STR51 படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இப்படத்தில் “காட் ஆப் லவ்” என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார். இப்படம் லவ் பேண்டஸி, காமெடி மற்றும் எமோஷனல் கலந்த கலவையாக தயாராகிவருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.

இதையும் படிங்க: சேயோன் படம் எப்படிப்பட்ட கதையைக் கொண்டது – இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கம்

இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை மிருணாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இதில் நடித்தார் சந்தானத்தையும் முக்கிய வேடத்தில் நடிக்கவைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் யா யார் நடிக்கிறார்கள் என தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்
இந்திய சாதி அமைப்பை உள்வாங்கிய AI.. எழும் கவலைகள்..
இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..