கத்தி படத்திற்கு வேறு ஒரு கிளைமாக்ஸ் இருந்தது – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
Director AR Murugadoss: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் சமீபத்தில் நடிகர் ஷண்முகப்பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள கொம்புசீவி படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கத்தி படம் குறித்து சொன்ன விசயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கத்தி
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூபாய் 100 கோடிகளுக்கு அதிகமாக இந்தப் படம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இவர் யாரை இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் நடிகர் ஷண்முகப் பாண்டியன் நட்டிப்பில் உருவாகியுள்ள கொம்புசீவி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி வேறு ஒன்று இருந்தது என்று வெளிப்படையாக் பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கத்தி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இவர் இரட்டை வேடத்தில் இந்தப் படத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நீல் நிதின் முகேஷ், டோட்டா ராய் சவுத்ரி, சதீஷ், சுதீப் முகர்ஜி, ரனீஷ் தியாகராஜன், ராமா, ஜீவா ரவி, அனு கிருஷ்ணா, ரவி வெங்கட்ராமன், டாமிகோ பிரவுன்லீ, எலிசபெத் பி. கார்பெண்டர், நளினிகாந்த், வீர சந்தானம் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் குறித்து சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியுள்ளார்.
கத்தி படத்திற்கு வேறு ஒரு கிளைமாக்ஸ் இருந்தது:
அதன்படி ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது, படத்தின் தொடக்கத்தில், சதீஷ் தொலைக்காட்சியில் ஒரு ராசிபலன் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருப்பார், அப்போதுதான் தளபதி விஜய் திரையில் தோன்றுவார். அதேபோல், படத்தின் உச்சக்கட்டக் காட்சியிலும், சமந்தா அதே ராசிபலன் நிகழ்ச்சியைப் பார்ப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அப்போது கதவு மணி ஒலிக்க, விஜய் சார் உள்ளே நுழைவார், அதைத் தொடர்ந்து இறுதிக் காட்சிகள் திரையிடப்படும். இருப்பினும், “யார் பெற்ற மகனோ” பாடல் பெரும் வெற்றி பெற்றதால், அந்தத் தருணத்தின் உணர்ச்சிப்பூர்வமான மனநிலையைக் கெடுக்க விரும்பாததால், அந்தக் காட்சியைப் படமாக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
Also Read… GV. Prakash: விரைவில் பெரிய அளவில்.. ஹேப்பி ராஜ் படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் அப்டேட்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#ARMurugadoss about the Alternative Climax of #Kaththi
– At the beginning of the film, Sathish is seen watching a horoscope program on TV, and that’s when #ThalapathyVijay makes his entry.
– Similarly, in the climax, #Samantha was supposed to be watching the same horoscope… pic.twitter.com/P5oeiTRvMt
— Movie Tamil (@_MovieTamil) December 16, 2025