Ameer: சூர்யாவின் வாடிவாசல் படத்தில் எனது பங்கு முக்கியமானது – அமீர் சொன்ன உண்மை!

Ameer On Vaadivaasal Movie Story: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராகவும், நடிகர்கவும் இருந்துவருபவர் அமீர். இவர் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்திருந்த நிலையில், அதில் சூர்யாவின் நடிப்பில் தயாராகவுள்ள வாடிவாசல் திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாமாம்.

Ameer: சூர்யாவின் வாடிவாசல் படத்தில் எனது பங்கு முக்கியமானது - அமீர் சொன்ன உண்மை!

வாடிவாசல் படம் பற்றி இயக்குனர் அமீர்

Published: 

11 Apr 2026 08:25 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநராகவும், நடிகர்கவும் இருந்துவருபவர் அமீர் (Ameer). இவர் தனுஷின் வட சென்னை (Vada Chennai) என்ற திரைப்படத்தில் “ராஜன்” என்ற வேடத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அதற்கு முன் இவர் படங்களில் நடித்திருந்தாலும், இவரின் நடிப்பில் இன்றுவரை பேசப்படும் படமாக வட சென்னை திரைப்படம் உள்ளது. இப்படத்தை அடுத்ததாக தொடர்ந்து புது புது படங்களில் நடித்துவந்தார். மேலும் கடந்த 2025ம் ஆண்டில் இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் வெளியான பைசன் (Bison) என்ற படத்தில் மிக முக்கியமான வேடத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்த படமும் இவருக்கு வெற்றியை கொடுத்திருந்தது. அந்த வகையில் தற்போது இவர் அரசன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அமீர், நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படம் (Vaadivaasal) பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்திலிருந்து விலகிய ஷாருக்கான்..? இணைந்த தெலுங்கு பிரபலம் யார் தெரியுமா?

சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் குறித்து அமீர் சொன்ன விஷயம்:

அண்ட் பேட்டியில் பேசியிருந்த அமீர், “வாடிவாசல் திரைப்படத்தில் எனது பங்கானது மிகவும் முக்கியமானது. இப்படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கும்போதே, இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய தனித்துவமாக நிற்கு மற்றும் மண்ணில் வேரூன்றிய படமாக இருக்கும் என நினைத்தேன்.

இதையும் படிங்க: மிஸ்டர் எக்ஸ் படம் இப்படிதான் இருக்கும் – நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேச்சு

இப்படமானது மண்ணின் வாழ்க்கையை சித்தரிக்கும், அதே வேளையில் ஆக்ஷன், எமோஷனல், காதல் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் படமாக இருக்கும். இப்படம் அனைவரையும் ஈர்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படம் எல்லா வகையிலும், திறன்பட ஒன்றிணைக்கும் ஒரு திரைக்கதை கிடைப்பது அரிது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்த எக்ஸ் பதிவு:

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் உருவாக்கப்படவுள்ள படம்தான் வாடிவாசல். இப்படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் நடந்துவந்த நிலையில், தற்போது வெற்றிமாறன் சிலம்பரசனின் அரசன் பட ஷூட்டிங்கில் இணைந்துவிட்டார். இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்தவுடன் சூர்யாவின் வாடிவாசல் படத்தய் இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் 2027ம் ஆண்டில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதன் பின் 2028ம் ஆண்டில் வெளியாகும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?