AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Decreased and Silver Price Remain Same | ஈரான் போரால் சென்னையில் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை குறைந்து நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் உள்ளது.

Gold Price : குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Apr 2026 11:21 AM IST

சென்னை, ஏப்ரல் 11 : ஈரான் போர் காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான எற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 10, 2026) உயர்வை சந்தித்த தங்கம், இன்று சற்று விலை குறைந்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்காலாம்.

ஈரான் போரால் ஏற்ற, இறக்கங்களில் தங்கம் விலை

ஈரான் போர் சர்வதேச அளவில் மிக கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.  புவிசார் பதற்றம் அதிகரித்துள்ளது, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என மிக கடுமையான சவால்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டுள்ளன. குறிப்பாக  ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளதால் அதன் வழியாக எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பல சிக்கல்கள் உருவாகியுள்ள நிலையில், தங்கம் நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us