ரஜினிகாந்தின் பழையப் பட காட்சிகள் கூலி படத்தில் உள்ளதா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையில் படத்தில் ரஜினியின் பழையப் பட காட்சிகள் உள்ளதா என்பது குறித்து இயக்குநர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ரஜினிகாந்தின் பழையப் பட காட்சிகள் கூலி படத்தில் உள்ளதா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

கூலி

Updated On: 

02 Jun 2025 19:14 PM

நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த கூலி படத்தை இயக்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படத்தின் வெளியீட்டிற்காக ப்ரீ புரடெக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் ரஜினியின் முந்தைய படங்களுக்கு அனிருத் ரவிசந்திரன் இசையமைத்ததுப் போலவே இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்தப் படத்தில் இணைந்து நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சௌபின் ஷாகிர், நாகர்ஜுனா, உபேந்திர ராவ், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், மோனிஷா பிளெஸ்ஸி என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூலி படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

கூலி படத்தில் ரஜினியின் பழையப் பட காட்சிகள் உள்ளதா?

கூலி படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. இந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தளபதி படத்தில் இருக்கும் கெட்டப் ஒன்று இடம்பெற்று இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கூலி படத்தில் ரஜினியின் பழையப் படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளதா என்று கேள்விகள் எழுப்பின.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது இந்த வதந்திகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் நடிகர் ரஜினியின் பழையப் பட காட்சிகளை நாங்கள் ரீ கிரியேட் செய்யவில்லை என்றும் ஆனால் பழையப் படத்தின் ஸ்டைலை மட்டும் கூலி படத்தில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 படத்தில் பிசியா நடித்து வரும் ரஜினி:

கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த உடனே நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கிள் கலந்துகொண்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.