பைசன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

Bison Kaalamaadan: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பைசன் காலமாடன். இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திக்ருக்கின்றது.

பைசன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

பைசன்

Published: 

31 Aug 2025 12:19 PM

பிரபல நடிகர் விக்ரமின் மகனாக சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). அவரது அப்பா விக்ரமிற்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால் துருவ் விக்ரமிற்கும் நடித்த உடனேயே வரவேற்பு கிடைத்துவிட்டதா என்றால் இல்லை. பல சவால்களை சந்தித்து தனது திரமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல தமிழில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து அப்பா விக்ரம் மற்றும் மகன் துருவ் விக்ரம் அப்பா மகனாகவே நடித்து வெளியான படம் மஹான். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். ஆகஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தில் அப்பா மகன் இருவரும் போட்டிப் போட்டு நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பைசன் காளமாடன் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

இவர்களின் கூட்டணி அறிவிக்கப்பட்டதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துகொண்டே இருக்கின்றது. அதன்படி படத்திற்கு பைசன் காளமாடன் என்று பெயர் வைக்கப்பட்டதே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து வெளியாகும் அப்டேட்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ வருகின்ற செப்டம்பர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read… Sivakarthikeyan : அனிருத்தின் திருமணம் எப்போது? சிவகார்த்திகேயன் சொன்ன ஆச்சர்ய பதில் இதோ!

இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sivakarthikeyan : 15வது ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்.. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!