Dhanush: கோவை வந்த தனுஷ்.. வேலுடன் வரவேற்ற ரசிகர்கள் – வீடியோ இதோ!

Dhanush Vel video: தென்னிந்திய சினிமாவில் லீட் நாயகனாக நடித்து அசத்திவருபவர் தனுஷ். இவரின் கர படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று (25/04/2026) கோவையில் நடைபெறவுள்ளது. இதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்த தனுஷை ரசிகர்கள், வேலுடன் வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Dhanush: கோவை வந்த தனுஷ்.. வேலுடன் வரவேற்ற ரசிகர்கள் - வீடியோ இதோ!

தனுஷ்

Updated On: 

25 Apr 2026 16:58 PM

 IST

நடிகர் தனுஷ் (Dhanush) தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம்தான் கர (Kara). இந்த படத்தை போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja), இயக்க வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயரித்துள்ளது. இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை மமிதா பைஜூ (Mamitha baiju) கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடிக்க, க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியில், கோவையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அந்த நிகழ்ச்சியின் காரணமாக, கோவை விமான நிலையத்தில் தனுஷ் ரசிகர்களை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பின்போது, தனுஷிற்கு ரசிகர் ஒருவர் முருகனின் வேலை பரிசாக கொடுத்துள்ளார். கையில் வேலுடன் தனுஷ் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: யூத் பட வெற்றியை பாராட்டிய மம்முட்டி.. நெகிழ்ச்சியில் கென் கருணாஸ்!

கோவை விமான நிலையத்தில் தனுஷ் ரசிகர்களை சந்தித்திருந்த வீடியோ:

 

தனுஷின் கர திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியானது, இன்று (25/04/2026) கோவையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ப்ரோசோன் மாலில் இந்த நிகழ்ச்சியின்போது தனுஷ் மற்றும் கர படக்குழு அனைவரும் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அந்த வகையில், தனுஷ் கோவை விமான நிலையத்தில், ரசிகர்களை சந்தித்திருந்தார். அப்போது அவருக்கு ரசிகர் ஒருவர் முருகனின் வேலை பரிசாக கொடுத்துள்ளார். அந்த வேலுடன் தனுசின் ரசிகர்களை சந்தித்தான் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அந்த படத்திற்காக முதலில் சாய் பல்லவியைதான் அணுகினேன் – இயக்குநர் ரத்னகுமார்!

தனுஷின் கர திரைப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியுடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் தனுஷ் இதுவரை நடித்திடாத வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் தனுஷின் நடிப்பில், வெளியான முதல் வெற்றி திரைப்படமாக கர படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்