Kuberaa : தனுஷின் ராயன் படத்தின் வசூலை முறியடித்து ‘குபேரா’ திரைப்படம் சாதனை!

Kuberaa Sets A Record In Collections : இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்த திரைப்படம் குபேரா. இந்த படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Kuberaa : தனுஷின் ராயன் படத்தின் வசூலை முறியடித்து குபேரா திரைப்படம் சாதனை!

தனுஷின் குபேரா திரைப்படம்

Published: 

22 Jun 2025 17:08 PM

தமிழ் சினிமாவையும் தாண்டி பான் இந்திய நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. இந்த படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula)  இயக்கியுள்ளார். இவர் இப்படத்திற்கு முன் பல முன்னணி பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் தனுஷின் 51வது படமாக வெளியாகியிருப்பதுதான் குபேரா. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), நாகார்ஜுனா (Nagarjuna) , சுனைனா, ஜிம் ஷார்ப் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது முதல் நாள் சுமார் ரூ 30 கோடிகளை வசூல் செய்துள்ளது.

இப்படத்திற்கு முன் தனுஷ் நடித்திருந்த ராயன்  (Raayan) படமானது சுமார் ரூ. 23.46 கோடிகளை வசூல் செய்திருந்த நிலையில், குபேரா படமானது முதல் நாளில் சுமார் ரூ. 30 கோடி வசூல் செய்து சாதனையா படைத்திருக்கிறது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷின் நடிப்பில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

குபேரா படக்குழு வெளியிட்ட முதல் நாள் வசூல் விவரம் :

குபேரா திரைப்படம் மக்கள் மனதை வென்றதா?

தனுஷின் நடிப்பில் மிக வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இந்த குபேரா இருந்தது என்றே கூறலாம். இதுவரை நடிகர் தனுஷ் இது போன்ற பிச்சைக்காரன் வேடத்தில் எந்த திரைப்படங்களிலும் நடித்திருந்ததில்லை. இந்த படத்தில்தான் அவர் தேவா என்ற பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது அரசியல் சார்ந்த திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  நாகார்ஜுனாவின் கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்கள் பெரிய அளவிற்கு இல்லை என்றே கூறலாம். மக்கள் வெகுவாக இப்படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர். வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இப்படம் மேலும் பல கோடிகளை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷிற்கு தேசிய விருது?

இந்த குபேரா படமானது பான் இந்திய திரைப்படமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படத்தில் தனுஷின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்துள்ளார்.  இருவரின் நடிப்பும் படத்துக்கு பக்கபலமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக தனுஷ் உண்மையாகவே பல கஷ்டங்களை மேற்கொண்டுள்ளாராம். இது குறித்து அவர் இசை வெளியீடு விழாவில் ஓப்பனாக பேசியிருந்தார். இந்நிலையில் இவர்க்கு இந்த குபேரா படத்திற்காகவும் தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.