Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madharasi : சிவகார்த்திகேயனின் மதராஸி.. பல கோடி கொடுத்து ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?

Madhrasi Movie OTT Rights : சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு ரிலீசிற்கு காத்திருக்கும் படம் மதராஸி. இந்த படமானது இறுதிக்கட்ட வேலையில் இருக்கும் நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

Madharasi : சிவகார்த்திகேயனின் மதராஸி.. பல கோடி கொடுத்து ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
மதராஸி திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Jun 2025 23:55 PM

பான் இந்திய இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சிக்கந்தர் (Sikandar) . பாலிவுட் நடிகர் சல்மான்கான் (Salman Khan) முன்னணி நாயகனாக நடித்திருந்த இப்படமானது கடந்த 2025, மார்ச் மாதத்தில் வெளியாகியிருந்தது. இப்படமானது வெளியாகி பெரும் தோல்வியைச் சந்தித்தது என்றே கூறலாம். அதைத் தொடர்ந்து இவர் தமிழில் இயக்கிவரும் படம்தான் மதராஸி (Madharasi). இப்படத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி நாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டிலே வெளியான நிலையில், அமரன்  (Amaran) படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் இணைந்தார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிக்கந்தர் மற்றும் மதராஸி பட ஷூட்டிங் என மாறி மாறி பணியாற்றி வந்தார்.

தற்போது இப்படமானது இறுதிக்கட்டத்திலிருந்து வரும் நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. அந்த நிறுவனம் வேறு எதுவும் இல்லை நெட்பிளிக்ஸ்தான் (Netflix). இந்த நிறுவனமானது சுமார் ரூ. 23 கோடிகளைக் கொடுத்து இப்படத்தினை வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சினிஉலகம் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

மதராஸி பட ரிலீஸ் தொடர்பாகப் படக்குழு வெளியிட்ட பதிவு :

சிவகார்த்திகேயனின் இந்த மதராஸி படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவரும் நிலையில், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படமானது பான் இந்தியத் திரைப்படமாகப் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் தமிழில் ரீ எண்டரி கொடுக்கும் படமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் நடித்துள்ள 2வது தமிழ்த் திரைப்படமாக இந்த மதராஸி அமைந்துள்ளது.

மதராஸி படத்தின் கதைக்களம் :

இந்த திரைப்படமானது அதிரடி ஆக்ஷ்ன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தொடர்பாக ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி ஒன்றில் “இப்படமானது கஜினி மற்றும் துப்பாக்கி போன்ற படங்களின் கலவையாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதிலிருந்தே தெரிகிறது இப்படமானது முழுக்க காதல், ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் இருக்கும் என்று தெரிகிறது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.