Kuberaa Movie : வாரிக்குவித்த வசூல்.. தனுஷின் குபேரா பட மொத்த கலெக்ஷன் இத்தனை கோடியா?

kuberaa 10th Day Collection : டோலிவுட் பிரபல இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில், பான் இந்தியப் படமாக அமைந்தது குபேரா. தனுஷின் நடிப்பில் வெளியான இப்படமானது 10 நாட்கள் முடிவில் உலகளாவிய வசூலில் எவ்வளவும் கலெக்ஷன் செய்துள்ளது என்பதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

Kuberaa Movie : வாரிக்குவித்த வசூல்..  தனுஷின் குபேரா பட மொத்த கலெக்ஷன் இத்தனை கோடியா?

தனுஷின் குபேரா திரைப்படம்

Published: 

02 Jul 2025 08:23 AM

பான் இந்திய நாயகனாக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). இவரின் முன்னணி நடிப்பில் தெலுங்கில் உருவான திரைப்படம்தான் குபேரா (Kuberaa). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டிலே தனுஷ் 51 என அறிவிக்கப்பட்டது. முற்றிலும் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்பாயாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதில் தனுஷிற்கு ஜோடியாக நேஷனல் க்ரஸ் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி இந்த படத்தில் நன்றாக இருந்தது என்றே கூறலாம். இந்த குபேரா படத்தில் தனுஷிற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna) இணைந்து நடித்திருந்தார். கிட்டத்தட்ட இந்த 2 நடிகர்களும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் தனுஷ் இதில் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். இவர் இதுவரை இந்த கதாபாத்திரத்தில் நடித்திடாத நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தோண்டியிருந்தது.

இந்த குபேரா படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் என அனைத்து மொழிகளிலும் வெளியானது. இந்நிலையில், இப்படமானது வெளியாகி 10 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

உலகளாவிய வசூலில் 10 நாட்கள் முடிவில், தனுஷின் குபேரா படமானது சுமார் ரூ. 132 கோடிகளை வசூல் செய்துள்ளாராம். மேலும் தமிழகத்தில் இப்படமானது வரும் ரூ.23 கோடி மட்டும் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை சினிஉலகம் செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குபேரா படக்குழு வெளியிட்ட பாடல் ட்ரெண்டிங் பதிவு :

குபேராவின் தனுஷின் நடிப்பு :

நடிகர் தனுஷ் இப்படத்தில் தேவா என்ற பிச்சைக்காரனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் பிச்சைக்காரனாக நடித்திருந்த நிலையில், அவரின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்ததாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் மற்ற படங்களை விடவும், கிளாமர் காட்சிகள் இல்லாமல் இப்படத்தில் சமீரா எனச் சாதாரண பெண் வேடத்தில் நடித்திருந்தார். மொத்தத்தில் இந்த குபேரா படமானது க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் அருமையாக இருந்தது என்றே கூறலாம்.

இதில் அரசியல் கதைக்களமும் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த படமானது தெலுங்கு மக்கள் மத்தியில் தனுஷிற்கு பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தை அடுத்ததாகத் தமிழ் சினிமாவில் இருந்து, தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற நடிகராக தனுஷ் இருந்து வருகிறார்.

இட்லி கடை திரைப்படம் :

குபேரா படத்தை அடுத்ததாக தனுஷின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தை தனுஷ்தான் இயக்கியுள்ளார். மேலும் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆகாஷ் பாஸ்கரனுடன் இணைந்து இப்படத்தய் தனுஷும் தயரித்துளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ள வருகிறார். தனுஷின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு வெளியாக்கும் வது படமாக இது அமைந்துள்ளது. இப்படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது.