Dhanush: சுவாரஸ்யமான திருப்பம்… தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு!

Kara Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் கர படமானது திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Dhanush: சுவாரஸ்யமான திருப்பம்... தனுஷின் கர திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு!

கர திரைப்படம்

Updated On: 

04 May 2026 09:48 AM

 IST

கோலிவுட் சினிமாவில் பன்முக திறமையை கொண்ட நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இந்த 2026ம் ஆனதில் இவரின் நடிப்பில் முதல் திரைப்படமாக வெளியாகியிருப்பதுதான் கர (Kara Movie). இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இதில் தனுஷ் ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha baiju) நடித்துள்ளார். இந்த ஜோடியானது இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கர படமானது முற்றிலும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதையில் அமைந்திருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. மேலும் திரையரங்குகளில் மக்களை ஈர்க்கும் விதத்தில், படக்குழு சுவாரஸ்ய ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தனது ஸ்பெஷல் தினத்தில்.. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த திரிஷா கிருஷ்ணன்!

தனுஷின் கர திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த கர திரைப்படத்தில் நடிகர் தனுஷ் திருடனாக நடித்துள்ளார். எதற்காக அவர் பணத்தை கொள்ளையடிக்கிறார், ஏன் திருட்டை ஆரம்பிக்கிறார்? என சுவாரஸ்ய திருப்பங்களுடன் இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ப்ரித்வி, மமிதா பைஜூ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிகர் எம் எஸ்.பாஸ்கரும் நடித்துள்ளார். இந்த கர படத்தில் தேசிய விருதுபெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவரின் கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமாக அமைந்த நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சியை வியந்து பார்க்கிறேன்.. கருப்பு பட கதையை கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன் – சூர்யா பேச்சு!

திரையரங்குகளில் கர படமானது திரையரங்குகளில் சிறப்பாக வெளியாகிவரும் நிலையில், முதல் நாணலில் சுமார் ரூ 5.5 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 5 நாட்களான நிலையில், இன்னும் ரூ 50 கோடி வசூலை தொடவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. படத்தின் கதை நன்றாக இருந்தாலும், மக்களிடம் சென்று சேரும் வகையில் இல்லை என வட்டாரங்ககளில் விமர்சனங்கள் இருந்துவருகிறது. அந்த வகையில் இந்த கர படமானது தனுஷிற்கு வெற்றியை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us
Related Stories
Sai Abhyankkar: கருப்பு படம் நான்தான் பண்ணுறேனானு டவுட் இருந்தது.. அந்த தருணத்தை எனது வாழ்க்கையிலே மறக்க மாட்டேன் – சாய் அபயங்கர்!
Trisha Krishnan: தனது ஸ்பெஷல் தினத்தில்.. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த திரிஷா கிருஷ்ணன்!
Trisha: பிரபல நடிகையுடன் மோதலா? அந்த நடிகர்தான் காரணமா? – திரிஷாவே சொன்ன உண்மை!
OTT Movie: கிராமத்து ரோடு வளைவில் இருக்கும் யக்ஷி.. திக் திக் காட்சிகளுடன் கூடிய இந்த மலையாள படத்தை பார்த்திருக்கீங்களா?
Suriya: ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சியை வியந்து பார்க்கிறேன்.. கருப்பு பட கதையை கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன் – சூர்யா பேச்சு!
Ajith Kumar: விஜய் குறித்த தவறாக பேசிய நடிகர்.. AK64 படத்திலிருந்து விலக்கிய அஜித்?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..